3500 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்
19 Feb 2026, 3:09 pm
<p><strong>3500 கிலோ ரேசன் அரிசி பறிமுதல் </strong></p>
<p>குழித்துறை/ நாகர்கோவில்,பிப்.19- கன்னியாகுமரி மாவட்ட பறக்கும் படை தனி வட்டாட்சி யர் பாரதி தலைமையில் ஓட்டுனர் ஜாண் பிரைட் பறக்கும் படை குழுவினர் விளவங்கோடு வட்டம் பகுதியில் வியாழன் அதிகாலை 3.30 மணி அளவில் பொது வினியோக திட்ட கடத்தல் தடுப்பு ரோந்து பணியில் இருந்தனர்.அப் போது. சந்தேகத்திற்கு இடமாக திருத்துவபுரம் பகுதியில் டாரஸ் லாரிகளுக்கிடையே வந்து கொண்டு இருந்த சொகுசு காரை சோதனை செய்ய நிறுத்தும் படி சைகை காட்டிய போதிலும் வாகனம் நிற்காமல் விரைந்து சென்றது. அதை மடக்கி பிடித்த போது ஓட்டுனர் தப்பிஓடிவிட்டார்.. பின்னர் வாகனத்தை சோதனை செய்ததில் சுமார் 1500 கிலோ பொது வினியோக திட்ட அரிசி இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. கடத்தல் வாகனம் பொது வினியோக திட்ட அரிசியுடன் பறிமுதல் செய்யப்பட்டன. அதனை தொடர்ந்து சுமார் காலை 6.30 மணியளவில் விளவங்கோடு வட்டம் காரோடு என்ற இடத்தில் கடத்தல் தடுப்பு ரோந்து பணியில் இருந்த போது கேரளா பதிவு எண் கொண்ட காரை சந்தேகப்பட்டு நிறுத்தும் படி சைகை காட்டிய போதிலும் கார் நிற்காமல் அதி வேகமாக சென்றது. தொடர்ந்து வாகனத்தில் விரட்டி சென்றபோது மாங்கோடு என்ற பகுதியில் காரை ரோட்டு ஓரம் புல் தரையில் நிறுத்தி விட்டு இரண்டு பேர் தப்பி ஓடினர். பின்னர் வாகனத்தை சோதனை செய்ததில் சுமார் 2000 கிலோ பொது வினியோக திட்ட அரிசி கேரளா மாநிலத்திற்கு கடத்தி செல்ல இருந்தது கண்டுபிடிக்கப் பட்டது. வாகனம் பொது வினியோக திட்ட அரிசியுடன் பறிமுதல் செய்யப்பட்டது.கைப்பபற்றப்பட்ட அரிசியை காப்புக்காடு அரசு நுகர் பொருள் வாணிபகழக கிட்டங்கியில் ஒப்படைக் கப்பட்டது. கடத்தல் வாகனம் விளவங்கோடு வட்டாட்சி யர் அலுவலகத்தில் நிறுத்தப்பட்டது.</p>
