திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு 34 யூனிட் இரத்தம் தானம்
29 Dec 2025, 6:22 pm
<p><strong>திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு 34 யூனிட் இரத்தம் தானம்</strong></p>
<p>திருப்பூர், டிச.29- திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி, நாட்டு நலப்ப ணித்திட்டம் அலகு - 2 சார்பாக, தத்தெடுத்த கிராமமான கரு மாபாளையத்தில் ஏழு நாள் சிறப்பு முகாம் நடைபெற்று வருகி றது. முகாமின் நிறைவு நாளான ஞாயிறன்று திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உடன் இணைந்து இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. இதில் அலகு - 2 ஒருங்கிணைப் பாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தார். கருமாபாளை யம் முன்னாள் ஊராட்சிமன்ற துணைத்தலைவர் சண்முக சுந்தரம் முகாமை துவக்கி வைத்து பேசினார். மாணவ பிரதிநிதி சந்தோஷ் மற்றும் அருள்குமார் வாழ்த்துரை வழங்கினார்கள். பிறகு மாணவ செயலர்கள் கிருஷ்ணமூர்த்தி, செர்லின், நவீன் குமார், ரேவதி, திவாகர், பிரியங்கா, பூபதி ஆகாஷ் ஆகியோர் தலைமையில் இன் னாள் மற்றும் முன்னாள் மாணவர்கள் மற்றும் ஊர் பொதுமக் கள் ஆர்வத்துடன் இரத்த தானம் செய்தார்கள். மொத்தம் 34 யூனிட் இரத்தம் தானமாக வழங்கப்பட்டது. இரத்த தானம் செய்த அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட் டது. இறுதியாக மாணவ பிரதிநிதி மதுகார்த்திக் நன்றியுரை வழங்கினார்.</p>
