தமிழ் திறனறிதல் தேர்வு கரூர் பரணி பார்க் வித்யாலயா மாணவர்கள் 335 பேர் சாதனை!
10 Dec 2025, 4:08 pm
<p><strong>தமிழ் திறனறிதல் தேர்வு கரூர் பரணி பார்க் வித்யாலயா மாணவர்கள் 335 பேர் சாதனை!</strong></p>
<p>கரூர், டிச.10 - தமிழ்நாடு அரசு தமிழ் திறனறிதல் தேர்வு-2025-இல் சாதனை படைத்த கரூர் பரணி பார்க் வித்யாலயா மாணவர்கள் 100 பேருக்கும், அவர்களுக்கு சிறப்பாக பயிற்சியளித்து கரூருக்கு மாநில அளவில் தொடர்ந்து பெருமை சேர்க்கும் பரணி பள்ளிகளின் முதன்மை முதல்வர் முனைவர். சொ.ராமசுப்பிரமணியன் தலைமையிலான ஆசிரியர்களுக்கும் பாராட்டு விழா செவ்வாயன்று பரணி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. தமிழ்மொழி இலக்கியத் திறனறிதல் தேர்வு 2022-இல் 46 பேர், 2023-இல் 103 பேர், 2024-இல் 86 பேர், 2025-இல் 100 பேர் வெற்றி பெற்று மொத்தம் 335 மாணவர்கள் இதுவரை சாதனைப் படைத்துள்ளனர். விழாவிற்கு தாளாளர் சா.மோகனரெங்கன் தலைமை வகித்தார். செயலர் பத்மாவதி மோகனரங்கன், அறங்காவலர் சுபாஷினி அசோக்சங்கர் முன்னிலை வகித்தனர். கரூர் மாவட்டக் கல்வி அலுவலர் - தனியார் பள்ளிகள் ப.க.செல்வமணி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பரிசுகள் வழங்கி பாராட்டினர். கரூர் பரணி ஆசிரியர்களின் மிகச் சிறப்பான பயிற்சியால் சாதனை படைத்த 100 வெற்றியாளர்களும் தமிழக அரசிடம் இருந்து மொத்த ஊக்கத்தொகையாக ரூ.36,00,000/- பெற்று சாதனை புரிந்துள்ளனர்.</p>
