பனியன் தொழிலாளர்களுக்கு 33 சதவீத ஊதிய உயர்வு திருப்பூரில் இருதரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு
18 Mar 2026, 3:34 pm
<p><strong>பனியன் தொழிலாளர்களுக்கு 33 சதவீத ஊதிய உயர்வு திருப்பூரில் இருதரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு</strong></p>
<p>திருப்பூர், மார்ச் 18 - திருப்பூர் பனியன் தொழிலாளர்களுக்கு, 4 ஆண்டுகளுக்கு 33 சதவிகிதம் ஊதிய உயர்வு வழங்குவது என உற்பத்தியாளர் சங்கங்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் இடை யிலான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற் பட்டது. திருப்பூரில் பின்னலாடை மற்றும் அதைச் சார்ந்த நிறுவனங்களில் பணிபுரியும் தொழி லாளர்களுக்கு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை சம்பள உயர்வு ஒப்பந்தம் போடப்படுகிறது. தொழிற்சங்கங்களும், உற்பத்தியாளர் சங்கங்களும் பேச்சுவார்த்தை நடத்தி, தொழிலாளர் சம்பள உயர்வு ஒப்பந்தம் செய்கின்றன. முந்தைய ஒப்பந்தம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் முடிவ டைந்த நிலையில், தற்போதைய விலைவாசி உயர்வுக்கு ஏற்ப ஊதிய உயர்வு, பஞ்சப்படி, வாடகைப்படி, குடும்ப நல உதவித்தொகை, திருமண உதவித்தொகை, ஓவர்டைம் படி உள்ளிட்ட கோரிக்கைகளை தொழிற்சங்க கூட்டுக்குழு முன்வைத்தது. இந்த கோரிக்கைகள் மீது இரு தரப்பின ருக்குமான பேச்சுவார்த்தை கடந்த 5 மாதங்க ளாக 8 முறை நடைபெற்றது. இந்நிலை யில், செவ்வாய்க்கிழமை திருப்பூர் ஏற்றும தியாளர்கள் சங்க அலுவலகத்தில், ஏற்றுமதி யாளர் சங்கத்தின் கௌரவத் தலைவர் சக்தி வேல், தலைவர் கே.எம்.சுப்பிரமணியன், கூட் டுக் குழுவின் ஆலோசகர் பிரேம் துரைசாமி மற்றும் தென்னிந்திய பனியன் உற்பத்தியா ளர்கள் சங்கம், பின்னலாடைத் துணி உற்பத்தி யாளர்கள் சங்கம் உள்ளிட்ட உற்பத்தியாளர் சங்கத் தரப்பு அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அதேபோல், தொழிற்சங்கத் தரப்பில் சிஐ டியு பனியன் சங்கத் தலைவர் கே.உன்னி கிருஷ்ணன், பொதுச்செயலாளர் ஜி.சம்பத், பொருளாளர் கே.நாகராஜன், ஏஐடியுசி பொதுச்செயலாளர் என்.சேகர், செயலாளர் செந்தில்குமார், எல்பிஎப் சார்பில் ஜி.பால சுப்பிரமணியம், க.ராமகிருஷ்ணன், சு.பூபதி, ஐஎன்டியுசி சார்பில் எ.சிவசாமி, ஸ்ரீனிவாசன், கே.செந்தில், எம்எல்எப் சார்பில் சக்திவேல், வெங்கடாசலம், ஏடிபி சார்பில் கே.கண்ணப் பன், கண்ணபிரான், எச்எம்எஸ் ஆர்.முத்து சாமி, கோவிந்தசாமி, டிடிஎம்எஸ் சார்பில் மனோகரன், சிவக்குமார், பிஎம்எஸ் சார்பில் சந்தானகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற் றனர். இந்த 9 ஆவது சுற்றுக் கூட்டத்தில், தற்போ தைய விலைவாசியை அடிப்படையாகக் கொண்டு ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் ஊதியத்தில், அடுத்த 4 ஆண்டுகளுக்கு மொத்தம் 33 சதவிகிதம் ஊதிய உயர்வு வழங் குவது என முடிவு செய்யப்பட்டது. முதல் ஆண்டுக்கு 18 சதவிகிதம், அடுத்தடுத்த 3 ஆண்டுகளுக்குத் தலா 5 சதவிகிதம் வழங்கப் படும். பஞ்சப்படி 20 ஆயிரம் புள்ளிகளுக்கு ரூ. 2,500-ம், அதற்கு மேல் உயரும் புள்ளிகளுக்கு 15.5 பைசா எனவும், பயணப்படி ரூ.30, ஓவர் டைம் மற்றும் டீ படி ஆகியவை கடந்த முறை யைக் காட்டிலும் உயர்த்தப்படும் எனவும் ஒப் புக்கொள்ளப்பட்டது. மேலும், 6 மாத காலம் பணி செய்திருந்தால், பணிக்காலத்தில் இறக் கும் தொழிலாளர்களின் குடும்பத்திற்கு உத வித்தொகை ரூ.21,500 வழங்குவது, திரும ணமாகாத பெண்களுக்கு அவர்களின் திரும ணத்தின்போது ஓர் ஆண்டு பணி முடித்தவர் களுக்கு ரூ.2,000, 2 ஆண்டுகள் முடித்தவர்க ளுக்கு ரூ.3,500, இரண்டு ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியவர்களுக்கு ரூ.5,000 வழங்கப்படும், ஆறு மாத காலம் வேலை செய்த தொழிலாளர்களுக்கு கம்பெனி நிர்வா கம் ரூ.1லட்சம் மதிப்பில் குழுக் காப்பீட்டு திட் டத்தை அமலாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட அம்சங்கள் இருதரப்பிலும் ஒரும னதாக ஏற்கப்பட்டு, உடன்பாட்டில் இருதரப்பி னர் கையெழுத்திட்டனர். இந்த ஒப்பந்தப்படி தொழிலாளர்கள், பீஸ் ரேட், காண்ட்ராக்ட் மற்றும் கம்பெனி ஹாஸ்ட லில் தங்கி வேலை செய்வோர் உள்ளிட்ட அனைத்துப் பகுதி தொழிலாளர்களும் தங்கள் சம்பள உயர்வை கேட்டுப் பெற வேண்டும் என்று சிஐடியு பனியன் தொழிலா ளர் சங்கப் பொதுச் செயலாளர் ஜி.சம்பத் கேட்டுக் கொண்டுள்ளார்.</p>
