தென்காசியில் 32 ஆவது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு 70 மாணவர்களின் ஆய்வுகள் சமர்ப்பிப்பு
1 Nov 2026, 10:51 pm

தென்காசியில் 32 ஆவது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு 70 மாணவர்களின் ஆய்வுகள் சமர்ப்பிப்பு

தென்காசி, நவ.01-தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் விலங்குகள் பாதுகாப்பு அறக்கட்டளை இணைந்து நடத்திய 32-வது தேசியகுழந்தைகள் அறிவியல் மாநாடு, தென்காசி மாவட்ட அளவில் இலஞ்சி டேணியல் ராஜம்மாள் மகளிர் கல்வியியல் கல்லூரியில் நடைபெற்றது.

நிலைத்த வளர்ச்சிக்கான அறிவியல் மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் என்ற கருப்பொருளில் ஒன்றிய அரசின் அறிவியல் -தொழில்நுட்பத் துறையின் வழிகாட்டுதலின்படி பள்ளி மாணவர்களிடையே அறிவியல் ஆய்வு மனப்பான்மையை வளர்க்கும் நோக்கில் நடத்தப்பட்ட மாநாட்டில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்தமாணவர்கள் ஆசிரியர்களின் வழிகாட்டுதலுடன் 70 ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்தனர்.மாநாட்டிற்கு பேராசிரியர் சித்ரா தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் ஷீலா நவரோஸ் வரவேற்றார். சுரண்டை அறிவியல் பூங்கா நிறுவனர் ஆறுமுகம் துவக்கவுரையாற்றினார்.

மாவட்டச் செயலாளர் சுரேஷ்குமார் மற்றும் ஆசிரியர்கள் துளிர் வினாடி வினா போட்டியை நடத்தினர்.மாவட்ட உதவி வனப் பாதுகாவலர் நெல்லை நாயகம் மாணவர்களுடன் கலந்துரையாடினார். கல்லூரித் தாளாளர் ராஜாகுமார், ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்த மாணவர்களுக்கு ‘இளம் விஞ்ஞானி’ பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.டெல்டா டிரேடர்ஸ் சார்பில் சுலைமான் வாழ்த்துரை வழங்கினார். தென்காசி ஆகாஷ் பிரண்ட்ஸ் அகாடமி நிர்வாக இயக்குநர் மாரியப்பன், இளம் விஞ்ஞானிகளுக்குப் பாராட்டுக் கேடயங்களை வழங்கினார். வினாடி வினா போட்டியில்வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ரோட்டரி கிளப் ஆஃப் குற்றாலம் செயலாளர் திருவிலஞ்சி குமரன் பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.

இம்மாநாட்டில் அரசு மேல்நிலைப்பள்ளி நெடுவயல், அச்சன்புதூர், மேலகரம், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிகடையநல்லூர், பாரத்வித்யா மந்திர் சீனியர் செகண்டரி சிபிஎஸ்இ பள்ளி இலஞ்சி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி துரைச்சாமிபுரம், ரத்னா உயர்நிலைப்பள்ளி கடையநல்லூர், ஷாலோம் மெட்ரிக் பள்ளிபாவூர்சத்திரம் ஆகிய பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களின் ஆய்வுகள் சிறந்த ஆய்வுகளாகத் தேர்வுசெய்யப்பட்டன.மாவட்டப் பொருளாளர் மதுபாலா நன்றி கூறினார்.தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள், திருப்பூர் சசூரி பொறியியல் கல்லூரியில் நவம்பர் 24 முதல் 26 வரை நடைபெறஉள்ள மாநில அளவிலான அறிவியல் மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.