32-வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு: ஆசிரியர்களுக்கான பயிற்சி
19 Jul 2026, 10:52 pm
<p><strong>32-வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு: ஆசிரியர்களுக்கான பயிற்சி</strong></p><p>cஇணைந்து நடத்தும் 32-வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டிற்கான வழிகாட்டி ஆசிரியர்கள் பயிற்சி முகாம், ராணிப்பேட்டை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் நடைபெற் றது. “நிலைத்த வளர்ச்சிக்கான அறிவியல் மற்றும் புதிய கண்டுபிடிப்புகள்” என்ற தலைப் பிலான இம்மாநாட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ம. மோகனா தொடங்கி வைத்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டத் துணைத்தலைவர் க. பூபாலன் தலைமை யில், மாவட்டச் செயலாளர் ஜெ. ஸ்ரீதர் முன்னி லையில் நிகழ்வு நடைபெற்றது. இதில் முதன்மை கல்வி அலுவலர் ம. மோகனா, சிறப்புரையாற்றினார். 10 முதல் 17 வயதுக் குட்பட்ட மாணவர்களின் ஆய்வுகள் 3 மாதங்க ளில் முடிக்கப்பட்டு, மாவட்ட அளவில் தேர்வு செய்யப்படுபவை மாநில மற்றும் தேசிய மாநாட்டிற்கு அனுப்பி வைக்கப்படும். இந்நிகழ்வில் ஆற்காடு, திமிரி, வாலாஜா மேற்கு மற்றும் கிழக்கு ஒன்றியங் களைச் சேர்ந்த 75 ஆசிரியர்கள் பங்கேற்ற னர். திடக்கழிவு மேலாண்மை குறித்து க. பழனிவேல், நீர் பயன்பாடு மற்றும் பாது காப்பு குறித்து முனைவர் கா.வே. கிருபானந் தம், மாநாட்டு அறிமுக உரை குறித்து முனைவர் பூ. தேவி, உணவு வேளாண்மை மற்றும் ஆரோக்கியம் குறித்து சி. ரஞ்சிதா, மற்றும் ஆற்றல் நான்கு பரிமாணங்கள் குறித்து மரிய ஜான் லியோன் ஆகியோர் பயிற்சி அளித்தனர். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில செயலாளர் அரவிந்தன், முன்னாள் வட்டார கல்வி அலுவலர் சி. முருகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். வரும் ஜூலை 21- அரக்கோணம் ஆண்ட்ரீஸ் மேல் நிலைப்பள்ளியில் அடுத்தகட்ட பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது. மாநில பொதுக் குழு உறுப்பினர் ஆர். ஆலிஸ் மேரி நன்றி கூறினார்.</p>
