32ஆவது கூத்துப்பறம்பா தியாகிகள் நினைவு தினம்
33 minutes before

32ஆவது கூத்துப்பறம்பா தியாகிகள் நினைவு தினம்

கூத்துப்பறம்பா தியாகிகள் தினத்தின் 32ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் கூத்துப்பறம்பாவில் இளைஞர் பேரணி, பொதுக்கூட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பிருந்தா காரத் இக்கூட்டத்தைத் தொடங்கி வைத்தார். வாலிபர் சங்கத்தின் அகில இந்தியத் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஏ.ஏ.ரஹீம், அகில இந்திய இணைச் செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான வி.கே.சனோஜ், மாநிலச் செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான எம்.விஜின், மாநிலத் தலைவர் சிந்தா ஜெரோம், சிபிஎம்கண்ணூர் மாவட்டச் செயலாளர் கே.கே.ராகேஷ், முகமது அப்சல் உள்ளிட்ட தலைவர்கள் இக்கூட்டத்தில் உரையாற்றினர்.