ஓ.எஸ்.எஸ். சத்தியநாதனின் 32 ஆவது நினைவேந்தல்
1 Dec 2025, 5:20 pm
<p><strong>ஓ.எஸ்.எஸ். சத்தியநாதனின் 32 ஆவது நினைவேந்தல்</strong></p>
<p>பாபநாசம், டிச.1- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினராகவும், விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவராகவும் அரும்பணி ஆற்றிய மகத்தான தலைவர் தோழர் ஓ.எஸ்.எஸ். சத்தியநாதனின் 32 ஆவது நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே, அம்மாபேட்டை ஒன்றியம், உக்கடை கிராமத்தில் பிறந்த தோழர் ஓ.எஸ்.எஸ் என்று உழைப்பாளி மக்களால் போற்றப்பட்ட தோழர் ஓ.எஸ். சத்யநாராயணனின் 32 ஆவது நினைவேந்தல் நிகழ்ச்சி அம்மாபேட்டையில் நடைபெற்றது. ஒன்றியச் செயலாளர் வி. ரவி தலைமை வகித்தார். மூத்த தோழர் ராமையன் செங்கொடியை ஏற்றிவைத்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.மனோகரன் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தியதுடன், தோழர் ஓ.எஸ்.எஸின் நினைவைப் போற்றி, அவர் ஆற்றிய அரும் பணிகளை நினைவு கூர்ந்து உரையாற்றினார். நிகழ்ச்சியில் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் வி. மயில்வாகனன், கே.கே. சேகர், என். ராஜேந்திரன், நகரச் செயலாளர் துரைராஜ், கிளைச் செயலாளர்கள் மாணிக்கம், பாலமுருகன், முருகானந்தம், முருகன், சத்தியமூர்த்தி உள்ளிட்ட தோழர்கள் புகழஞ்சலி செலுத்தினர். டிச.14 அன்று தோழர் ஓ.எஸ்.எஸின் நினைவு நாள் சிறப்பு பேரவை அம்மாப் பேட்டையில் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.</p>
