தியாகி பழனிச்சாமி நகரில் 320 வாக்குகள் திடீர் மாயம்
19 Nov 2025, 3:33 pm
<p><strong>தியாகி பழனிச்சாமி நகரில் 320 வாக்குகள் திடீர் மாயம்</strong></p>
<p>திருப்பூர், நவ, 19 – திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 23 ஆவது வார்டில் உள்ள தியாகி பழனிச் சாமி நகரில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருக்கும் 320 வாக்காளர்க ளின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து மாயமாகியுள்ளன. இவர்க ளின் வாக்குகளை உறுதி செய்ய செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி வலியு றுத்தியுள்ளது. இந்தியத் தேர்தல் ஆணையத்தால் 2002 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டிய லை அடிப்படையாகக் கொண்டு செயல் படுத்தப்பட்டு வரும் சிறப்பு தீவிர வாக் காளர் சீராய்வுப் பணியின் (எஸ்.ஐ. ஆர்.) போது, திருப்பூரில் உள்ள, தியாகி பழனிச்சாமி நகரின் முழுவதும் உள்ள 320 பேரின் வாக்குகளும் மொத்தமாக விடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. வாக்குச்சாவடி அலுவலரிடம் உள்ள 2002 ஆம் ஆண்டு பட்டியல் மற்றும் இணையதளப் பட்டியல் இரண்டிலும் தேடிப் பார்த்தபோது, ஒட்டுமொத்தப் பகுதி மக்களின் பெயர்களும் காணா மல் போயிருப்பது அதிர்ச்சியை ஏற்ப டுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக, மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் சி.மூர்த்தி, வடக்கு ஒன்றியச் செயலாளர் ஆர். காளியப்பன், வடக்கு மாநகரச் செயலாளர் பா. செளந்தரராசன் உள்ளிட்டோர் செவ்வாயன்று மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளித் தனர். இதில், விடுபட்ட 320 வாக்குகளை யும் உடனடியாக மீண்டும் வாக்காளர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். முன்னதாக, கடந்த நவம்பர் 17 ஆம் தேதி, திருப்பூர் வடக்கு சட்டமன்றத் தொகுதியின் தேர்தல் அலுவலரான வருவாய் கோட்டாட்சியரை மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ச. நந்த கோபால், த. ஜெயபால், மற்றும் வடக்கு மாநகர செயலாளர் பா. செளந்தரரா சன் ஆகியோர் பகுதி மக்கள் சார்பில் நேரில் சந்தித்து மனு அளித்தனர். அப் போது, கோட்டாட்சியர் அலுவலகத்தில் தொழில்நுட்பப் பணியாளர்கள் உதவி யுடன் கணினியில் தேடியபோதும் தியாகி பழனிச்சாமி நகர் வாக்குகள் விடுபட்டிருப்பது உறுதி செய்யப்பட் டது. அதற்கு தேர்தல் அலுவலர், “வாக் காளர்கள் அனைவரும் படிவத்தின் முதல் பகுதியை மட்டும் நிரப்பி, ஆணை யம் அறிவித்துள்ள 13 ஆவணங்களில் ஏதேனும் இரண்டை இணைத்து வாக்குச்சாவடி அலுவலரிடம் கொடுக்க வேண்டும். டிசம்பரில் வெளியாகும் வரைவு வாக்காளர் பட்டியலில் இப் பெயர்கள் இடம்பெறாது,” என்று தெரி வித்ததாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கூறினர். 30 ஆண்டுகளாக வாக்குரிமை பெற் றிருந்த மக்களை ஒட்டுமொத்தமாக நீக்கியுள்ள இந்தச் சிறப்பு தீவிர வாக்கா ளர் சீராய்வுப் பணியை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும், நீக்கப்பட்ட அனைத்து வாக்காளர் பெயரும் மீண் டும் சேர்க்கப்பட வேண்டும் எனவும், 18 வயதான அனைவருக்கும் வாக்குரிமை யை உறுதி செய்திட வேண்டும் எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக செவ்வாயன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் சி.மூர்த்தி, வடக்கு ஒன்றியச் செயலாளர் ஆர். காளியப்பன், வடக்கு மாநகர செயலா ளர் பா.செளந்தரராசன் உள்ளிட்டோர் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து விடுப்பட்ட வாக்குகளை உடனடியாக சேர்க்க நடவடிக்கை எடுக்கும் படி வலி யுறுத்தியுள்ளனர்.</p>
