தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

விவசாயிகள் சங்க 31 ஆவது மாநில மாநாடு எழுச்சிப் பேரணியுடன் தூத்துக்குடியில் தொடங்கியது

27 Sept 2026, 8:49 pm
விவசாயிகள் சங்க 31 ஆவது மாநில மாநாடு எழுச்சிப் பேரணியுடன் தூத்துக்குடியில் தொடங்கியது

விவசாயிகள் சங்க 31 ஆவது மாநில மாநாடு எழுச்சிப் பேரணியுடன் தூத்துக்குடியில் தொடங்கியது

பேரணியில் டாக்டர் விஜுகிருஷ்ணன், பெ.சண்முகம் உள்ளிட்ட தலைவர்களும், ஆயிரக்கணக்கான விவசாயிகளும் அணிவகுத்தனர்.

தூத்துக்குடி, செப். 27- கார்ப்பரேட் ஆதரவு - வேளாண் விரோத கொள்கைகளை எதிர்ப்போம் என்கிற எழுச்சி முழக்கத்துடன் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் 31 ஆவது மாநில மாநாடு தூத்துக்குடியில் செப்டம்பர் 27 அன்று எழுச்சிப் பேரணியுடன் தொடங்கி யது.

தூத்துக்குடியில் செப்டம்பர் 27,28,29 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில மாநாடு நடைபெறுகிறது. அதன் எழுச்சிமிகு தொடக்கமாக அண்ணா

நகர் 12ஆவது தெருவில் துவங்கிய பேரணியில் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் திரண்டு வந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் செம்பதாகை ஏந்தி, கொள்கை முழக்கமிட்டு அணிவகுத்தனர். சிதம்பர நகர் பேருந்து நிறுத்தம், டிவிடி சிக்னல் அருகில் அமைக்கப்பட்டிருந்த பொது மாநாட்டு மேடை அருகில் பேரணி சங்கமித்தது.

பொது மாநாடு

சங்கத்தின் மாநிலத் தலைவர் டி. ரவீந்திரன் பொது மாநாட்டிற்கு தலைமை வகித்தார். வரவேற்புக்குழு செயலாளர் பா. புவிராஜ் வரவேற்றார். அகில இந்திய விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் டாக்டர் விஜூ கிருஷ்ணன், துணைத் தலைவர்கள் ஹன்னன் முல்லா, பெ. சண்முகம் ஆகியோர் சிறப்புரையாற்றினர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் சாமி நடராஜன், பொருளாளர் கே. பி. பெருமாள், கேரள விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் வல்சன் பனோலி மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் உரையாற்றினர். தூத்துக்குடி மாவட்ட பொருளாளர் எஸ். நம்பிராஜன் நன்றி கூறினார்.

பிரதிநிதிகள் மாநாடு செப்டம்பர் 28, 29 ஆகிய 2 நாட்கள் நடைபெறுகிறது.

மாநாட்டையொட்டி தூத்துக்குடி நகரம் முழுவதும் பட்டொளி வீசிப்பறக்கும் செங்கொடிகளும் செந்தோரணங்களும் காண்போர் வியக்கும் வண்ணம் காட்சி அளிக்கிறது.

கர்நாடக மாநில விவசாயிகள் சங்க தலைவர் பரத்ராஜ் உரையாற்றினார்.புதுவை சப்தர்ஹஸ்மி குழுவினரின் புரட்சிகர இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.