திருவள்ளூர் மாவட்டத்தில் 31,57,413 வாக்காளர்கள்
23 Feb 2026, 6:26 pm
<p><strong>திருவள்ளூர் மாவட்டத்தில் 31,57,413 வாக்காளர்கள்</strong></p>
<p>திருவள்ளூர், பிப் 23- திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்றத் தொகுதிகள் அடங்கிய இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலு வலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் திங்களன்று (பிப். 23) வெளியிட்டார். அதன்படி கும்மிடிப்பூண்டி தொகுதி யில் ஆண் வாக்களர்கள் 9372, பெண் வாக்கா ளர்கள் 1,29,372, மூன்றாம் பாலினம் 36 என மொத்தம் 2,51,603 வாக்காளர்களும், பொன்னேரி ஆண்கள் 121221, பெண்கள் 127662 மூன்றாம் பாலினம் 34 என மொத்தம் 2,48,917 வாக்காளர்களும், திருத்தணி ஆண்கள் 128642, பெண்கள் 131417, மூன்றாம் பாலினம் 25 என மொத்தம் 260084 வாக்கா ளர்களும், திருவள்ளூர் ஆண்கள் 131188, பெண்கள் 127426, மூன்றாம் பாலினம் 37 என மொத்தம் 248651 வாக்காளர்களும், பூந்த மல்லி ஆண்கள் 176849, பெண்கள் 186769, மூன்றாம் பாலினம் 70 என மொத்தம் 363688 வாக்காளர்களும், ஆவடி ஆண்கள் 209662, பெண்கள் 219035, மூன்றாம் பாலினம் 75 என மொத்தம் 428772 வாக்காளர்களும், மதுரவாயல் ஆண்கள் 179602, பெண்கள் 184349, மூன்றாம் பாலினம் 80 என மொத்தம் 364031 வாக்காளர்களும், அம்பத்தூர் ஆண்கள் 162248, பெண்கள் 168175, மூன்றாம் பாலினம் 57 என மொத்தம் 330480 வாக்கா ளர்களும், மாதவரம் ஆண்கள் 205922, பெண்கள் 214596 மூன்றாம் பாலினம் 83 என மொத்தம் 420601 வாக்காளர்களும், திரு வொற்றியூர் ஆண்கள் 117181, பெண்கள் 123289, மூன்றாம் பாலினம் 116 என மொத்தம் 240586 வாக்காளர்களும் உள்ளனர். படிவம்-8 னையும், பெயர் நீக்க வேண்டு மெனின் படிவம்-7 னையும் 23.02.2026 முதலே வாக்காளர் பதிவு அலுவலரிடத் திலோ, உதவி வாக்காளர் பதிவு அலுவலரி டத்திலோ, வாக்குச்சாவடி நிலைய அலு வலரிடமோ மற்றும் voters.eci.gov.in என்ற இணையதள முகவரியிலும் பதிவேற்றம் செய்யலாம் என திருவள்ளூர் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ச.சுரேஷ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) .ஸ்ரீராம், 10 சட்ட மன்ற தொகுதிகளின் வாக்காளர் பதிவு அலு வலர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர் கள் கலந்துக்கொண்டனர்.</p>
