தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தேசிய நெடுஞ்சாலைகளில் 312 பாலங்கள் ஆபத்தான நிலையில் இயக்கம் டாக்டர் வி.சிவதாசன் எம்.பி. கண்டனம்

yesterday
தேசிய நெடுஞ்சாலைகளில் 312 பாலங்கள் ஆபத்தான நிலையில் இயக்கம் டாக்டர் வி.சிவதாசன் எம்.பி. கண்டனம்
<p><strong>தேசிய நெடுஞ்சாலைகளில் 312 பாலங்கள் ஆபத்தான நிலையில் இயக்கம் டாக்டர் வி.சிவதாசன் எம்.பி. கண்டனம்</strong></p><p>இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள பாலங்கள் மற்றும் மேம்பாலங்களில் தொடரும் விபத்துகளைத் தவிர்க்க, காலதாமதமின்றி பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டாக்டர் வி.சிவதாசன் எம்.பி. வலியுறுத்தி யுள்ளார்.ஆபத்தான நிலையில் நூற்றுக்கணக்கான பாலங்கள்இதுதொடர்பான அவரது கேள்விக்கு சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரிஅளித்த பதிலின்படி, நாடு முழுவதும் 471 தேசிய நெடுஞ்சாலைப் பாலங்களில் கட்டமைப்புப் பழுது கண்டறியப்பட்டுள்ளது. இதில் இதுவரை வெறும் 159 பாலங்கள் மட்டுமே பழுதுபார்க்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 312 பாலங்களின் பழுதுபார்ப்புப் பணிகள் 2028 டிசம்பர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.உயிர்களுடன் விளையாடும் ஒன்றிய அரசுஅபாயகரமானவை என அடையாளம் காணப்பட்ட பாலங்களை உடனுக்குடன் சரி செய்யாமல், பல ஆண்டுகளுக்குப் பிறகு முடிப்போம் எனக்கூறுவது பொதுமக்களின் உயிருடன் விளையாடும் செயலாகும். பேரழிவுகள் நிகழும் வரை அரசு காத்திருக்கக் கூடாது. எனவே, நாடு முழுவதும்உள்ள பாலங்கள் குறித்து சுயேச்சையான பாதுகாப்புத் தணிக்கை (Safety Audit) நடத்தி, அவசர கால அடிப்படையில் பழுதுகளைச் சரிசெய்ய வேண்டும் என்று டாக்டர் வி.சிவதாசன் எம்.பி. கேட்டுக்கொண்டுள் ளார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.