சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைக்கழகம் ஆக்கிரமித்த 31 ஏக்கர் நிலம் மீட்பு
10 Jan 2026, 2:48 pm
<p><strong>சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைக்கழகம் ஆக்கிரமித்த 31 ஏக்கர் நிலம் மீட்பு</strong></p>
<p>தஞ்சாவூர், ஜன.10 - சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக் கழகத்தால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த 31 ஏக்கர் நிலத்தை உயர்நீதிமன்ற உத்தரவின்படி, வருவாய்த் துறையினர் மீட்டு, சிறைத் துறையினரிடம் ஒப்படைத்தனர். தஞ்சாவூர் மாவட்டம் திருமலை சமுத்திரத்தில் திறந்தவெளி சிறைச் சாலைக்கான 31 ஏக்கர் புஞ்சை தரிசு நிலத்தை, அப்பகுதியில் செயல்பட்டு வரும் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் ஆக்கிரமிப்பு செய்து, மிகப்பெரிய அளவில் கட்டடங்கள் கட்டி வகுப்புகள் நடத்தி வந்தன. இந்த ஆக்கிரமிப்பு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. பல ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், சாஸ்த்ரா பல்கலைக் கழகத்தால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலத்தை வருவாய்த்துறை மீட்க வேண்டும் என உத்தரவிட்டது. இதையடுத்து, சனிக்கிழமை மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் உத்தரவின்படி, மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் ஆலோசனையின்படி, கோட்டாட்சியர் நித்யா தலைமையில் வட்டாட்சியர் சிவக்குமார், துணை வட்டாட்சியர் மதியழகன், தலைமை நிலஅளவர் கிருஷ்ணமூர்த்தி, வருவாய் ஆய்வாளர் முருகராஜ், கிராம நிர்வாக அலுவலர் சங்கீதா, கிராம உதவியாளர் ஆரோக்கியராஜ் ஆகியோர் திருமலை சமுத்திரம் சென்று, ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த நிலத்தை மீட்டு, அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். மீட்கப்பட்ட நிலம் சிறைத்துறை அலுவலர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டது. மீட்கப்பட்ட நிலத்தில், “இது அரசுக்குச் சொந்தமான நிலம். இதில் அத்துமீறி நுழைபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்ற அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டது.</p>
