அருமனை மழுவன்சேரியில் வாலிபர் சங்க 30 ஆவது ஆண்டு பொங்கல் விழா
27 Jan 2026, 3:28 pm
<p><strong>அருமனை மழுவன்சேரியில் வாலிபர் சங்க 30 ஆவது ஆண்டு பொங்கல் விழா</strong></p>
<p>அருமனை,ஜன.27- இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் குமரி மாவட்டம் அருமனை மழுவன்சேரி கிளை சார்பில் 30 ஆவது ஆண்டு பொங்கல் விழா, விளை யாட்டுப் போட்டி கலை நிகழ்ச்சி களுடன் நடைபெற்றது. இந்த ஆண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு பொங்கல் விழா சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடை பெற்றது. ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழாவிற்கு பிரித்திகா தலைமை தாங்கினார். அருமனை பேரூராட்சி கவுன்சிலர் நெல்சன், ஜெனிஷா, வாலிபர் சங்கத்தின் அருமனை வட்டார தலைவர் சரவணன், மாவட்ட செயலாளர் விஷ்ணு, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரெஜின், இந்திய மாணவர் சங்க மாவட்ட இணைச் செயலாளர் சுபிக்சா ஆகியோர் உரையாற்றினர். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கத்தின் மாவட்ட பொறுப்பாளர் பேராசிரியர் சனல் விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கும் , பொதுமக்களுக்கும் பரிசுகள் வழங்கி உரையாற்றினார். ஸ்ரீஷா நன்றி கூறினார். நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். </p>
