தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சிவகங்கை மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டத்தில் 306 மனுக்கள் அளிப்பு

5 Jan 2026, 6:21 pm
சிவகங்கை மாவட்ட மக்கள்  குறைதீர் கூட்டத்தில் 306 மனுக்கள் அளிப்பு
<p><strong>சிவகங்கை மாவட்ட மக்கள் &nbsp;குறைதீர் கூட்டத்தில் 306 மனுக்கள் அளிப்பு</strong></p> <p>சிவகங்கை, ஜன.5- சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட ரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் இலவச வீட்டுமனைப் பட்டா, சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் உத வித்தொகை, மாவட்ட ஊனமுற்றோர் மற்றும் மறு வாழ்வுத் துறையின் உதவித்தொகைகள், மாற்றுத் &nbsp;திறனாளிகளுக்கான உபகரணங்கள், புதிய &nbsp;மின்னணு குடும்ப அட்டை உள்ளிட்ட பல்வேறு &nbsp;கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிட மிருந்து மொத்தம் 306 மனுக்கள் பெறப்பட்டன. பெறப்பட்ட மனுக்களில் தகுதியுடையவற்றின் மீது தனி கவனம் செலுத்தி, விரைந்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட &nbsp;ஆட்சித்தலைவர் கா. பொற்கொடி அறிவுறுத்தினார். மேலும், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி &nbsp;மற்றும் மேம்பாட்டு கழகத்தின் சார்பில், தூய்மைப்பணியாளர்கள் நலவாரியத்தின் கீழ் ஒரு பயனாளிக்கு ரூ.25,000 மதிப்பீட்டில் இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு உதவித் தொகைக்கான ஆணையையும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.செல்வசுரபி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை யின் திட்ட இயக்குநர் ஜி.அரவிந்த், மாவட்ட ஆட்சி யரின் நேர்முக உதவியாளர் (பொது) விஜயகுமார், சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் தே.ஜெபி கிரேசியா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சையது முகைதீன் இப்ராகிம் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.