தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

3,000 ஆண்டு பழமையான பெருங்கற்கால ஈமச் சின்னங்கள் கண்டுபிடிப்பு

7 Jan 2026, 4:05 pm
3,000 ஆண்டு பழமையான பெருங்கற்கால ஈமச் சின்னங்கள் கண்டுபிடிப்பு
<p><strong>3,000 ஆண்டு பழமையான பெருங்கற்கால ஈமச் சின்னங்கள் கண்டுபிடிப்பு</strong></p> <p>தேனி, ஜன.7- தேனி மாவட்டம் மயிலாடும்பாறை அருகே உள்ள பாம்பாடும் பாறையில், சுமார் 3,000 ஆண்டுகள் பழமை &nbsp;வாய்ந்த பெருங்கற்கால நினைவுச் சின்னங்களை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். கள ஆய்வு பின்னணி வாய்க்கால் பாறையைச் சேர்ந்த வேல்முருகன் என்பவர் அளித்த தகவலின் பேரில், கடமலைக்குண்டு அரசு மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியரும், தொல்லியல் ஆய்வாளருமான மூ.செல்வம் இப்பகுதி யில் விரிவான களாய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் முடிவில், இப்பகுதி பண்டைய மக்களின் வாழ்விடமாகவும், வழிபாட்டிடமாகவும் விளங்கியது உறுதி செய்யப்பட்டுள்ளது. மூங்கிலாற்று நாகரிகம் வைகை நதி மற்றும் அதன் துணை நதிக்கரை களில் பெருங்கற்கால மக்கள் செறிவாக வாழ்ந்த தற்கான சான்றுகள் ஏற்கனவே கிடைத்துள்ளன. அந்த &nbsp;வகையில், சதுரகிரி, கட்டளைக் கோம்பை மற்றும் பஞ்சந்தாங்கி மலைப்பகுதிகளில் உற்பத்தியாகி, &lsquo;யானை கஜம்&rsquo; வழியாக வந்து வைகையுடன் சங்க மிக்கும் &lsquo;மூங்கிலாறு&rsquo; ஒரு முக்கிய நீர் ஆதாரமாகும். இந்த ஆற்றின் தொடக்கப் புள்ளியான பாம்பாடும் &nbsp;பாறை பகுதியில் பல நூற்றாண்டுகளாக மக்கள் தொடர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர். இதற்குச் சான்றாக, &nbsp;பாறையில் செதுக்கப்பட்டுள்ள பழமையான வழிபாட்டி டங்கள். ஆங்காங்கே காணப்படும் பாறை உரல்கள், பாறையைச் சுற்றியுள்ள ஈமச் சின்னங்கள் ஆகி யவை உள்ளன. தனித்துவமான நெடுங்கற்கள் பாம்பாடும் பாறையின் வடக்குச் சரிவில், விவசாய &nbsp;நிலங்களுக்கு மத்தியில் எஞ்சியுள்ள சிறு மண் பரப்பில் &nbsp;கல்வட்டங்கள் மற்றும் நெடுங்கல் அமைப்புகள் கண்ட றியப்பட்டுள்ளன. இதில் குறிப்பிடத்தக்க சிறப்பம்சங்கள்: பல்வகை அமைப்புகள்: இங்கு தனிநிலை நெடுங்கல், இரட்டை நெடுங்கல், துணைகல் மற்றும் நடு கல் என பல்வேறு நிலைகளில் நினைவுச் சின்னங் கள் உள்ளன. முக்கோண வடிவம்: பெரும்பாலான நெடுங்கற் களின் மேல் முனைப்பகுதி கூர்மையான முக்கோண வடிவில் செதுக்கப்பட்டுள்ளது. இது அக்கால மக்க ளின் தனித்துவமான கலைத்திறனைப் பிரதிபலிக்கி றது. காலம்: இவை சுமார் 3,000 ஆண்டு பழமையா னவை என ஆய்வாளர் தெரிவிக்கிறார். அழிந்து வரும் எச்சங்கள் ஒரு காலத்தில் இப்பகுதி முழுவதும் பரவிக் &nbsp;கிடந்த இந்த வரலாற்றுச் சின்னங்கள், காலப்போக் கில் விவசாய விரிவாக்கம் மற்றும் நவீன குடியேற் றங்களால் பெருமளவு சிதைக்கப்பட்டுள்ளன. தற்போது &nbsp;புதர் மண்டிய பகுதிகளில் மட்டுமே ஒரு சில எச்சங்கள் &nbsp;காணப்படுகின்றன. பல நெடுங்கற்கள் கால ஓட்டத்தில் &nbsp;மண்ணில் புதைந்துள்ளன. பாதுகாப்பு கோரிக்கை &ldquo;இந்த மண்ணின் மூதாதையர் வரலாற்றையும், வைகை நதி நாகரிகத்தின் வேர்களையும் பறை சாற்றும் இந்த நினைவுச் சின்னங்களை அரசு மற்றும் &nbsp;தொல்லியல் துறை உடனடியாக தலையிட்டு பாது காக்க வேண்டும். உள்ளூர் மக்களும் இதன் வரலாற்று முக்கியத்துவத்தை உணர்ந்து சிதைக்காமல் காக்க வேண்டும்&rdquo; என ஆய்வாளர் மூ.செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.