லட்சத்தீவுக்கு மேற்கே அரபிக்கடலில் ரூ.3,000 கோடி போதைப்பொருள் பறிமுதல்!
30 Sept 2026, 11:13 am

லட்சத்தீவு தீவுக்கூட்டத்துக்கு மேற்கே, அரபிக்கடலில் சர்வதேச கடல் பகுதியில் இந்திய கடலோரக் காவல் படையினர் நடத்திய அதிரடி நடவடிக்கையில், ரூ.3,000 கோடிக்கும் அதிக மதிப்புள்ள சுமார் 526 கிலோ போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

குஜராத் பயங்கரவாத தடுப்புப் படை (ATS) அளித்த உளவுத்தகவலின் அடிப்படையில், இந்திய கடலோரக் காவல் படையினர் லட்சத்தீவு தீவுகளுக்கு மேற்கே உள்ள அரபிக்கடல் பகுதியில் சந்தேகத்திற்கிடமான ஈரான் நாட்டுப் படகை கண்காணித்தனர்.

கடந்த செப்.25-ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையில், கடல் மற்றும் வான்வழி கண்காணிப்புக்குப் பிறகு படகை விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்த கடலோரக் காவல் படையினர், அதில் சோதனை நடத்தினர். அப்போது ஹெராயின் மற்றும் மெத்தாம்பெட்டமைன் உள்ளிட்ட சுமார் 526 கிலோ போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நடவடிக்கையில் படகில் இருந்த 5 பாகிஸ்தானியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களின் சர்வதேச சந்தை மதிப்பு ரூ.3,000 கோடிக்கும் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட 5 பாகிஸ்தானியர்கள், படகு மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்கள் பாதுகாப்புடன் மும்பைக்கு கொண்டு செல்லப்பட்டு, பல்வேறு விசாரணை அமைப்புகளால் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நடவடிக்கை தொடர்பான அதிகாரப்பூர்வ காணொளியையும் இந்திய கடலோரக் காவல் படை வெளியிட்டுள்ளது.