தூய்மைப் பணியாளர்களுக்கு 300 சதுர அடியில் ஓய்வறைகள்!
15 Nov 2025, 1:19 pm

தூய்மைப் பணியாளர்களுக்கு 300 சதுர அடியில் ஓய்வறைகள்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை, நவ. 15 - தூய்மைப் பணியாளர் கள் செய்வது வேலையல்ல, சேவை என்றும், அவர் களை பாதுகாப்பது அர சின் கடமை என்றும் முதல மைச்சர் மு.க. ஸ்டாலின் தெரி வித்துள்ளார். இதனடிப்ப டையில், சென்னையில் 200 வார்டுகளிலும் தலா 300 சதுர அடியில் ஓய்வறைகள் கட்டப்படும் என்றும் முதல மைச்சர் அறிவித்துள்ளார். சென்னை கலைவா ணர் அரங்கில் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்க ளுக்கு 3 வேளையும் உணவு வழங்கும் திட்டம், குடியி ருப்பு வீடுகள் மற்றும் புதிய நலத்திட்டங்களை சனிக்கிழ மையன்று தொடங்கி வைத்து, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதா வது: வெயில், மழை, வெள் ளம் என எந்தப் பேரிடர் வந் தாலும் தூய்மைப் பணியா ளர்களின் பங்கு முக்கிய மானது. அவர்களால் தான் சென்னை நீர்நிலைகள் தூய்மையாக உள்ளன. விடி யும் போது சென்னை நகரம் தூய்மையாக இருக்க தூய்மைப் பணியாளர்களே காரணம். அவர்களிடம் குப் பைகளை 100 சதவிகிதம் தரம் பிரித்து மக்கள் கொடுக்க வேண்டும். தூய்மைப் பணியாளர் களின் வாழ்க்கை மேம்பட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, சென்னையில் 200 வார்டுகளிலும் கழிப்பறை களுடன் 300 சதுர அடியில் ஓய்வு அறைகள் அமைக்கப் படும். அத்துடன் உணவு வழங்கும் திட்டம் டிசம்பர் 6 முதல் அனைத்து நகரப் பகுதிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்படும். தூய்மைப் பணியாளர்களின் வாரிசுகள் உயர்கல்வி பெற்று அரசுப் பதவிகளைப் பெற வேண் டும். இவ்வாறு முதலமைச்சர் கூறியுள்ளார்.