பல்லடத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் காலியாக கிடக்கும் 300 வீடுகள்
27 Nov 2025, 3:11 pm
<p>திருப்பூர், நவ.27- பல்லடம் தாலுகா பெரும்பாளியில் அடுக்குமாடி குடியிருப்பில் பயனாளி கள் பங்களிப்புத் தொகை கட்ட முடியா ததால் 300 வீடுகள் காலியாக உள்ளது. அரசு பங்களிப்புத் தொகை கட்டுவதற் கான மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என பயனாளிகள் கோருகின்றனர். நகர்ப்புற மக்களின் தேவைக்கேற்ப தமிழ்நாட்டின் மாநகரப் பகுதிகளில் பல் வேறு இடங்களில் அடுக்குமாடி குடியி ருப்புகள் கட்டி கட்டண அடிப்படையில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரு கிறன. தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம், நகர்ப்பு றங்களில் வசிக்கும் ஏழை மக்கள் வாழ்வ தற்காக அடுக்குமாடி குடியிருப்புகள் உருவாக்கப்பட்டன. அதிலும் குறிப் பாக திருப்பூர், கோவை போன்ற தொழி லாளர்கள் நகரங்களில் தனிநபர் குடி யிருப்புக்கான இடம், பொதுமக்க ளுக்கு எளிதில் கிடைக்காத நிலையில் பலரும் அரசு கட்டித்தரும் அடுக்குமாடி குடியிருப்புகளை பங்களிப்புத் தொகை செலுத்தி பயனடைந்து வருகிறார்கள். இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரும்பாளி பகுதி யில் கட்டப்பட்ட 430 அடுக்குமாடி குடியி ருப்புகள் கொண்ட வீடுகளில், இது வரை 130 பேர் மட்டும் முழுத்தொகை செலுத்தி குடியேறி உள்ளனர். மீத முள்ள 300 வீடுகள் பல மாதங்களாக காலியாக உள்ளன. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் சிலர் கூறுகையில், திருப்பூர் மாவட்டத் தில் உள்ள ஏராளமான மக்கள் வீட்டு மனைக்காகவும், அடுக்குமாடி குடியி ருப்புகளுக்கும் மாவட்ட ஆட்சியர் அலு வலகம், வட்டாட்சியர் அலுவலகம் என அரசு அலுவலகங்களில் விண்ணப் பித்து பலர் ஆண்டுக்கணக்கில் காத்துக் கிடக்கின்றனர். வாரம் தோறும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர் கூட்டத்தில் நூற்றுக் கணக்கில் வீட்டுமனை மற்றும் அடுக்கு மாடி குடியிருப்பில் வீடு கேட்டு விண் ணப்பித்து வருகின்றனர். இந்நிலையில், திருப்பூர் மாவட்டத் தில் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் பல வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு காலி யாக கிடக்கிறது. மேலும் பகுதிக்கு ஏற்ப பங்களிப்புத் தொகையும் வசூலிக்கப்படு கிறது. திருப்பூர் மாவட்டம் தெக்கலூ ரில் அடுக்குமாடி குடியிருப்பு சுமார் ரூ.1. 50 லட்சம் என்றால், வீரபாண்டி பகுதி யில் உள்ள குடியிருப்பு ஒரு விலை இருக்கும். தற்போது பல்லடம் பெரும் பாளியில் பங்களிப்பு தொகை ரூ.3 லட்சத்து 9 ஆயிரத்து 200 என்பதால், பல ரும் முழுத்தொகையை ஒரே தவணை யில் செலுத்தி, குடியேற முடியாத நிலை உள்ளது. பாதித்தொகை செலுத்தினால் அவர்களுக்கு தேவையான எஞ்சிய தொகையை, கடன் வசதி செய்து தந் தால் மாதந்தோறும் செலுத்தும் வசதி ஏற்படுத்திக் கொடுத்தால் அனைவரும் பயன் பெறுவார்கள். அதேபோல் குடியி ருப்பு சங்கங்கள் மூலம் தொடர்ச்சியாக அடுக்குமாடி குடியிருப்பில் குப்பை எடுப்பது துவங்கி, சாக்கடை கால்வாய் தூர்வாருவது மற்றும் பிற அடிப்படை தேவைகளை செய்யும் போது தான் குடியிருப்பு முழு சுகாதாரத்துடன் வாழ்வதற்கான பகுதியாக இருக்கும் என பயனாளி கள் கூறினர். திருப்பூர் நகர்ப்புற மேம்பாட்டு வாரிய அலுவலர்கள் கூறும்போது, பல்லடம் பெரும்பாளி அடுக்குமாடி குடி யிருப்பில் 300 வீடுகள் காலியாக உள் ளன. பல்லடம் பகுதியில் 700 பேர் அடுக் குமாடி குடியிருப்பில் வீடு கேட்டு விண் ணப்பித்துள்ளனர். ஆனால் பங்க ளிப்புத் தொகை ஒரே தவணையாக யாரும் முழுமையாக செலுத்ததால், இன்னும் குடியேறவில்லை. முழுத் தொகை செலுத்திய 130 பேர் தற்போது குடியிருந்து வருகிறார்கள். பங்க ளிப்புத் தொகை ஒவ்வொரு பகுதியி லும் வெவ்வேறு அளவு தொகை இருக் கும். பெரும்பாளியில் ரூ.3 லட்சம் அதிகத் தொகை என்பதால், பயனாளி கள் பணம் செலுத்தத் தாமதம் ஆகிறது என்றனர்.</p>
