தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கொத்தடிமைகளாக இருந்த 30 பேர் மீட்பு தெலங்கனாவில் இருந்து தமிழகம் வருகை

23 May 2026, 12:39 am
கொத்தடிமைகளாக இருந்த 30 பேர் மீட்பு  தெலங்கனாவில் இருந்து தமிழகம் வருகை
<p><strong>கொத்தடிமைகளாக இருந்த 30 பேர் மீட்பு தெலங்கனாவில் இருந்து தமிழகம் வருகை</strong></p><p>​​​​​​​திருவள்ளூர், மே 22- திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு அருகே உள்ள செஞ்சி அம்மன் நகர் மற்றும் கருங்காலி ஆகிய பழங்குடி கிராமங்களைச் சேர்ந்த 17 பெரியவர்கள், 13 குழந்தைகள் என மொத்தம் 30 பேர், தெலங்கானா மாநிலம் நிஷாமாபாத் மாவட்டம் மகுடி கிராமத்தில் உள்ள கிரண் என்பவருக்கு சொந்தமான செங்கல் சூளையில் கடந்த 3 ஆண்டுகளாக கொத்தடிமைகளாக பணிபுரிந்து வந்தனர். அங்கு அவர்களுக்கு சரியான உணவு, கூலி வழங்காமல், குழந்தைகளையும் வேலைக்கு அமர்த்தி உரிமையாளர் கிரண் கீழ்த்தரமாக நடத்தியுள்ளார். இதுகுறித்து தொழிலாளி பாபு அளித்த தகவலின் பேரில், தெலங்கானா காவல் மற்றும் வருவாய்த்துறையினர் அவர்களை மீட்டனர். பின்னர், தமிழகத்தைச் சேர்ந்த 30 பேரும் பேருந்து மூலம் பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டனர். கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் செல்வகுமார், வட்டாட்சியர் சோமசுந்தரம், திருப்பாலைவனம் வருவாய் ஆய்வாளர் பிரேம்நாத், கருங்காலி கிராம நிர்வாக அலுவலர் சீனிவாசன் மற்றும் பொன்னேரி, திருப்பாலைவனம் காவல்துறையினர் உள்ளிட்ட அதிகாரிகள், மீட்கப்பட்டவர்களுக்கு மதிய உணவு வழங்கி, வாகனங்கள் மூலம் அவர்களைச் சொந்த ஊர்களுக்குப் பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.