கும்மிடிப்பூண்டியில் 3 வயது சிறுமி கொடூர பாலியல் வன்கொலை! பெண்கள் - குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்!
15 Jun 2026, 8:57 pm

கும்மிடிப்பூண்டியில் 3 வயது சிறுமி கொடூர பாலியல் வன்கொலை! பெண்கள் - குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்!

சிபிஎம் வலியுறுத்தல்

சென்னை, ஜூன் 15 - கும்மிடிப்பூண்டியில் 3 வயதுச் சிறுமி கொடூரமான பாலியல் படுகொலை செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழ கத்தில் பெண்கள் - குழந்தைகள் பாது காப்பை உறுதி செய்ய வேண்டுமென தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.

இதுதொடர்பாக, கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது

முட்புதர், சுடுகாட்டிற்குள் வீசப்பட்ட கொடூரம்

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப் பூண்டி பகுதியில் மூன்று வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு முட்புதருக்குள் வீசப்பட்டு அச்சிறுமி உயிரிழந்துள்ளதும், பூந்தமல்லியில் 7 வயது சிறுமி பாலியல் வன் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு சுடு காட்டில் வீசப்பட்டுள்ளதும் தமிழ கத்தையே உலுக்கியுள்ளது. இந்த கொடூர செயல்களை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

கும்பல் பாலியல் வன்கொலையா?

மூன்று வயது சிறுமி பாலியல் வன் கொடுமை படுகொலையில் குற்ற வாளி ஒருவர் மட்டுமே இந்த செய லில் ஈடுபட்டுள்ளதாக திருவள்ளூர் மாவட்ட போலீசார் தெரிவிக்கின்றனர். ஆனால், சிறுமி கும்பல் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப் பட்டுள்ளதாக பொதுமக்கள் கூறுகின்ற னர். எனவே, காவல்துறை தீர விசா ரித்து குற்றமிழைத்த அனைவரையும் கைது செய்திடவும், கைது செய்யப்பட்ட வர்கள் மீது உரிய வழக்குப்பதிவு செய்து விரைந்து நடவடிக்கை எடுக்கவும், காவல்துறை ரோந்து, சி.சி.டி.வி. கண் காணிப்பு போன்றவற்றை வலுப்படுத்திட வும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை வலியுறுத்துகிறது.

நாளுக்கு நாள் அதிகரிக்கும் குற்றங்கள்

கும்மிடிப்பூண்டி சிப்காட் பகுதியில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட் கள் விற்பனை அதிகமாக நடந்து வருவதாகவும், கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளியும் கஞ்சா விற்பனையில் ஈடு பட்டதாகவும் பொதுமக்கள் புகார் அளித் துள்ளனர். எனவே, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் விற்பனையை முற்றிலும் ஒழித்திடவும், இந்த சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபடு பவர்களை உடனடியாக கைது செய்திட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

மீதான பாலியல் வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது தொடர்கதையாக உள்ளது. இதனைத் தடுப்பதற்கு தமிழக அரசும், காவல் துறையும் தேவையான நடவடிக்கை களை மேற்கொள்ள வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழ்நாடு அரசை வலி யுறுத்துகிறது. இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.