சென்னை விரைவு செய்திகள்
25 Nov 2025, 3:29 pm

பராமரிப்பு பணி காரணமாக 3 ரயில் சேவைகளில் மாற்றம்

விழுப்புரம், நவ.25- திண்டிவனம் ரயில் நிலைய யார்டு பகுதியில் ரயில்வே பணி காரணமாக 3- ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ரயில் துறை அறிவித்துள்ளது. சென்னை ரயில்வே கோட்டத்துக்குட்பட்ட திண்டிவனம் யார்டில் பொறியியல் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இப்பணிகள் காரணமாக, சென்னை தாம்பரத்தில் இருந்து காலை 9.45 மணிக்கு புறப்படும் தாம்பரம்- விழுப்புரம் பயணிகள் ரயில் (வண்டி எண் 66045) வருகிற 26, 27, 29 மற்றும் டிசம்பர் 1 ஆகிய தேதிகளில் திண்டிவனம்- விழுப்புரம் இடையே பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது.இதனால் இந்த ரயில்கள் திண்டிவனத்திலேயே நிறுத்தப்படும். அதுபோல் விழுப்புரத்தில் இருந்து மதியம் 1.40 மணிக்கு புறப்பட வேண்டிய விழுப்புரம்- சென்னை கடற்கரை பயணிகள் ரயில் (வண்டி எண் 66046) வருகிற 26, 27, 29 மற்றும் டிசம்பர் 1 ஆகிய தேதிகளில் விழுப்புரம்- திண்டிவனம் இடையே பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த ரயில் திண்டிவனம் ரயில் நிலையத்தில் இருந்து மதியம் 2.25 மணிக்கு புறப்பட்டுச்செல்லும். மேலும் சென்னை எழும்பூரில் இருந்து மதியம் 1.45 மணிக்கு புறப்படும் எழும்பூர்- மதுரை வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 12635) வருகிற 26, 27, 29 மற்றும் டிசம்பர் 1 ஆகிய தேதிகளில் வசதிக்குரிய ரெயில் நிலையத்தில் சுமார் 30 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர் இயக்கப்படும். இந்த தகவல் திருச்சி கோட்ட ரயில்வே மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

அரிதான பிரச்சனையை எதிர்கொண்ட திருநங்கை

சென்னை, நவ.25- பாலின மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்ட 22 வயது திருநங்கை ஒருவருக்கு, செயற்கையாக உருவாக்கப்பட்ட பிறப்புறுப்புக்கும் பெருங்குடல் பகுதிக்கும் இடையே துவாரம் ஏற்பட்டு , கழிவுகள் இயல்புக்கு மாறாக முன்பகுதியில் வெளியேறும் அசாதாரணப் பிரச்சினை ஏற்பட்டது. இத்தகைய சிக்கல் ஒரு சதவீத நோயாளிகளுக்கு மட்டுமே ஏற்படும் மிக அரிதான பாதிப்பாகும். இந்த நோயாளிக்கு, திறந்த நிலை அறுவை சிகிச்சை மேற்கொள்ளாமல், நவீன எண்டோஸ்கோபி சிகிச்சை மூலம் வெற்றிகரமான தீர்வு காணப்பட்டுள்ளது. தமிழகத்திலேயே முதன்முறையாக, மாடுகளின் இதயத் தசைப் பகுதியிலிருந்து தயாரிக்கப்பட்ட 'பொவைன் பெரிகார்டியல் பேட்ச்' (Bovine Pericardial Patch) எனப்படும் உயிரித் திசு மற்றும் சிறப்புக் கிளிப் (Over-the-Scope Clip) கொண்டு இந்த நுட்பமான சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதனை தெரிவித்த எஸ்.ஆர்.எம் பிரைம் மருத்துவமனையின் இரைப்பை குடலியல் மற்றும் கல்லீரல் துறையின் தலைவர் டாக்டர் எஸ். அருள்பிரகாஷ் ஒரே நேரத்தில் இரண்டு எண்டோஸ்கோபி நிபுணர்கள் இணைந்து மேம்பட்ட நுட்பத்தைப் பயன்படுத்தி, துல்லியமாக உயிரித் திசுவைப் பொருத்தி துவாரத்தை அடைத்தனர் என்றார். இந்த சிகிச்சை ஒரே நாளில் மேற்கொள்ளப்பட்டதால், அறுவை சிகிச்சையின்றி நோயாளி அதே நாளில் வீடு திரும்ப முடிந்தது. இந்த புதிய எண்டோஸ்கோபி நுட்பம், மிகவும் அரிதான சிக்கலுக்குச் செலவு குறைந்த மற்றும் விரைவான தீர்வை வழங்கியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

ரயில் நிலையம் அருகே கஞ்சா விற்ற இளைஞர் கைது விழுப்புரம், நவ.25 – விழுப்புரம் ரயில் நிலையம் அருகே விற்பனைக்காகக் கஞ்சா பொட்டலங்கள் எடுத்து வந்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்து, அவரிடமிருந்து சுமார் 300 கிராம் கஞ்சாவைப் பறிமுதல் செய்தனர். ரயில் நிலையம் அருகே கஞ்சா கொண்டு வரப்படுவதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் பேரில், உதவி ஆய்வாளர்கள் லியோ சார்லஸ் மற்றும் ராஜேஷ் தலைமையிலான காவலர்கள் சோதனை மேற்கொண்டனர். சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த நபரைப் பிடித்து விசாரித்ததில், அவர் விழுப்புரம், திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்த காதர் உசேன் (24) என்பது தெரிய வந்தது.அவரிடமிருந்த 300 கிராம் கஞ்சாவைப் பறிமுதல் செய்த போலீசார், அவர் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

விழுப்புரம், நவ.25 – விழுப்புரம் புதுச்சேரி சாலையில் உள்ள கெங்கராம்பாளையம் மதுவிலக்கு சோதனை சாவடி அருகே பள்ளிச் சீருடையில் குழந்தைகளைப் பயன்படுத்தி, புதுச்சேரி மதுபானத்தை நூதன முறையில் கடத்தி வந்த பரத் என்கிற பர்வீன் (30) என்பவரை விழுப்புரம் போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 316 மது பாட்டில்கள் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.