கோவை கல்லூரி மாணவி கும்பல் வன்கொடுமை 3 பேருக்கு வாழ்நாள் சிறைத் தண்டனை!
7 Mar 2026, 2:36 pm

கோவை கல்லூரி மாணவி கும்பல் வன்கொடுமை 3 பேருக்கு வாழ்நாள் சிறைத் தண்டனை!

மகளிர் நீதிமன்றம் 126 நாட்களில் அதிரடித் தீர்ப்பு

மகளிர் நீதிமன்றம் 126 நாட்களில் அதிரடித் தீர்ப்பு கோயம்புத்தூர், மார்ச் 7- கோவை கல்லூரி மாணவி கும்பல் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட வழக்கில், கைதான மூன்று குற்றவாளிகளுக் கும் வாழ்நாள் முழுமைக்குமான ஆயுள் தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள் ளது. சம்பவம் நடந்த 126 நாட்களில் இந்த அதிரடித் தீர்ப்பு வழங்கப்பட்டி ருப்பது குறிப்பிடத்தக்கது. கோவை விமான நிலையம் அருகேயுள்ள பிருந்தாவன் நகர் பகுதியில், கடந்த 2025 நவம்பர் 2-ஆம் தேதி, கல்லூரி மாணவி ஒரு வர் தனது நண்பருடன் காரில் பேசிக்கொண்டு இருந்தார். அப் போது, 3 பேர் கொண்ட கும்பல், நண்பரை ஆயுதங்களால் தாக்கி விட்டு, மாணவியை மட்டும் இழுத்துச் சென்று கும்பல் பாலியல் வன்கொடு மைக்கு உள்ளாக்கியது. இச்சம்பவம் தமிழகம் முழு வதும் பெரும் அதிர்ச்சியை ஏற் படுத்தியது. இது தொடர்பாக பீள மேடு தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி கருப்பசாமி (எ) சதீஷ், கார்த்திக் (எ) காளீஸ்வரன் மற்றும் தவசி (எ) குணா ஆகிய மூவரையும் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். மேலும், இந்த வழக்கில் ஒரு மாதத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, விரைவாகத் தண்டனை பெற்றுத்தரப்படும் என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதியளித்தார். அதன்படியே காவல்துறை 30 நாட்களில் குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்தது. கடந்த பிப்ரவரி மாதம் கோவை மக ளிர் நீதிமன்றத்தில் ரகசிய அறை யில் சாட்சி விசாரணை தொடங்கப் பட்டு, பிப்ரவரி 23 அன்று நிறைவ டைந்தது. அரசுத் தரப்பில் மொத்தம் 72 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். சனிக்கிழமையன்று மதியம் 2 மணிக்கு பலத்த பாதுகாப்புடன் குற்றவாளிகள் மூவரும் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிபதி சுந்தரராஜ், அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்ட தாக அறிவித்தார். தண்டனை குறித்த வாதங்களின்போது, குற்றவாளி களின் வயதைக் கருத்தில் கொண்டு குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டுமென அவர்கள் தரப்பு வழக்கறிஞர் கோரினார். ஆனால், இக்கொடூரச் செயலுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டுமென அரசு தரப்பு வாதிட்டது. மாலை 3.30 மணிக்கு தீர்ப்பு விவ ரங்களை வாசித்த நீதிபதி சுந்தர ராஜ், கும்பல் பாலியல் வன் கொடுமை குற்றத்திற்காக கருப்ப சாமி, கார்த்திக், தவசி ஆகிய மூவ ருக்கும் எஞ்சிய வாழ்நாள் முழு வதும் சிறையில் இருக்கும் வகை யில் வாழ்நாள் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டார். மேலும், பாதிக்கப்பட்ட மாணவிக்கு 7 லட்ச ரூபாயும், காயமடைந்த அவரது நண் பருக்கு 2 லட்சம் ரூபாயும் இழப்பீடாக வழங்கவும் அரசுக்கு உத்தர விட்டார். தீர்ப்பிற்குப் பிறகு செய்தியாளர் களிடம் பேசிய அரசு வழக்கறிஞர் ஜிஷா, சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், பெண்களுக்கு எதிரான குற்றத்தில் 4 மாதங்களுக்கு உள்ளாகவே இத்தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பது நீதித்துறைக்கும் காவல்துறைக்கும் கிடைத்த பெருமை என்று தெரி வித்தார்.

பெண்களுக்கு நீதியை உறுதி செய்யும் நடவடிக்கை: மாதர் சங்கம் வரவேற்பு'

கோவை கல்லூரி மாணவி கும்பல் பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்ற வாளிகளுக்கு வாழ்நாள் முழுமைக்கும் சிறைத் தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வரவேற்றுள்ளது. சங்கத்தின் மாநிலத் தலைவர் ஜி. பிரமிளா, பொதுச்செயலாளர் அ. ராதிகா ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில், “கோவை கல்லூரி மாணவி வழக்கில் காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுத்ததும், அரசு வழக்கை துரிதமாக விசா ரணைக்கு கொண்டு வந்ததும், அரசு வழக்க றிஞரின் வாதமும், நீதிமன்றம் விரை வாக தீர்ப்பு வழங்கியதும் பெண்க ளுக்கு நீதியை உறுதி செய்யும் நட வடிக்கையாகும்” என்று வரவேற்றுள்ளது. “கொடூரமான வன்முறைக்கு ஆளான போதும் அச்சமின்றி நீதிக்காக உறுதி யுடன் நின்று போராடிய மாணவியை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் பாராட்டுகிறது. சமூக அழுத்தங்களையும் மீறி நீதிக்காக அவர் எடுத்த துணிச்சலான நிலைப்பாடு பாதிக்கப்படுகிற பெண்க ளுக்கு ஊக்கமளிப்பதாகும். பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் சமூகத்தில் பெரும் அச் சத்தை ஏற்படுத்தும் நிலையில், இத்த கைய வழக்குகளில் விரைந்து விசா ரணை நடத்தி கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பது அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் கோரிக்கையாகும். பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் மிகக் கொடூரமான குற்றங்கள் என்றும் இத்தகைய குற்றங்க ளுக்கு கடுமையான தண்டனை வழங்கப் பட வேண்டும் என்றும் நீதிமன்றமும் தனது தீர்ப்பில் தற்போது குறிப்பிட்டுள்ளது. எனவே, நிலுவையில் உள்ள பாலியல் வன்முறை வழக்குகளையும் விரைந்து விசாரித்து, குற்றவாளிகளுக்கு தண்ட னையை உறுதிப்படுத்துமாறு, கேட்டுக் கொள்கிறோம்” என்று மாதர் சங்கம் குறிப்பிட்டுள்ளது.