சார்ஜ் போடப்பட்ட மின்சார பைக் தீப்பிடித்ததில் 3 பைக்குகள் எரிந்து நாசம்
4 Dec 2025, 3:52 pm
<p><strong>சார்ஜ் போடப்பட்ட மின்சார பைக் தீப்பிடித்ததில் 3 பைக்குகள் எரிந்து நாசம்</strong></p>
<p>கடலூர், டிச.4- கடலூர் அண்ணா நகர் பகுதியில் வசிக்கும் சேது என்பவர் கடலூர் மாவட்ட காவல் துறை அலுவல கத்தில் பணிபுரிந்து வரு கிறார். இவரது வீட்டில் இரண்டு மின்சார பைக்கு கள் உட்பட 3 மோட்டார் சைக்கிள்கள் உள்ளன. புதன்கிழமை இரவு, ஒரு மின்சார மோட்டார் சைக்கிளுக்கு, சேதுவின் சகோதரர் இனியன் வழக்கம் போல் சார்ஜ் போட்டுவிட்டு அனைவரும் தூங்கச் சென்றனர். காலை 5 மணி அளவில், சார்ஜ் போடப்பட்ட பைக் திடீரெனத் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து அருகி லிருந்த மற்ற பைக்குகளும் தீப்பிடித்து எரிந்தன. மேலும், வீட்டுக்குள் புகை மண்டலமாகக் காட்சியளித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சேதுவும், அவரது குடும்பத்தினரும் வெளியே வந்து பார்த்தபோது மூன்று மோட்டார் சைக்கிள்களும் எரிந்த நிலையில் இருந்தன. இத்தகவல் அறிந்த கடலூர் தீயணைப்புத் துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து எரிந்த மோட்டார் சைக்கிளை அணைத்தனர். இந்த விபத்தில், மூன்று மோட்டார் சைக்கிள்கள், மின் ஒயர்கள், மின் மோட்டார்கள், ஜன்னல்கள் முழுவதும் எரிந்து நாச மானது தெரியவந்தது. இன்னும் சற்று நேரம் ஆகி யிருந்தால் வீடு முழுவ தும் தீப்பிடித்து எரிந்திருக்க லாம். இந்தத் தீ விபத்து காரணமாக லட்சக்கணக்கில் மதிப்பிலான பொருட்கள் சேதமானது தெரியவந்தது. இத்தகவல் அறிந்த கடலூர் புதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.</p>
