தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தவெகவிற்கு தாவிய 3 அதிமுக எம்எல்ஏக்கள்!

25 May 2026, 9:33 pm
தவெகவிற்கு தாவிய 3 அதிமுக எம்எல்ஏக்கள்!

தவெகவிற்கு தாவிய 3 அதிமுக எம்எல்ஏக்கள்!

எம்எல்ஏ பதவியும் ராஜினாமா சென்னை, மே 25 - தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், தங்களது சட்டமன்ற உறுப்பினர் பத வியை ராஜினாமா செய்துவிட்டு, அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூன்று பேர், ஆளும் தமிழக வெற்றிக் கழகத்தில் கரைந்துள்ளனர்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக வெறும் 47 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று மூன்றாவது பெரிய கட்சி யாக இருந்த நிலையில், முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் தலைமையி லான 25 எம்எல்ஏ-க்கள், திடீரென தவெக ஆதரவு நிலையெடுத்த னர்.

கடந்த மே 13 அன்று நடை பெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பி லும், அதிமுக கொறடா உத்த ரவுக்கு மாறாக விஜய் தலைமை யிலான தவெக அரசுக்கு ஆதர வாக வாக்களித்தனர்.

சட்டமன்றத் தில் அதிமுக இரண்டாக பிளவு பட்டது.

இந்நிலையில், எஸ்.பி.வேலுமணி - சி.வி. சண்முகம் கோஷ்டியிலிருந்த மதுராந்தகம் தொகுதி எம்.எல்.ஏ. மரகதம் குமரவேல், பெருந்துறை தொகுதி எம்.எல்.ஏ. ஜெயக்குமார் மற்றும் தாராபுரம் தொகுதி எம்.எல்.ஏ. சத்யபாமா ஆகியோர் சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரை சந்தித்து, திங்கட்கிழமையன்று தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தனர்.

பின்னர், அடுத்த சில நிமிடங்களிலேயே, அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை சந்தித்து தமிழக வெற்றிக் கழகத்திலும் இணைந்து, கட்சி உறுப்பினர்க் கான அட்டைகளை பெற்றுக் கொண்டுள்ளனர்.

அவர்கள், முதலமைச்சர் விஜய்யையும் நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில், தலைமைச் செயலகத்திலேயே கட்சி மாறிய சம்பவம் அரசியல் வட்டாரத்தில் விவாதங்களை எழுப்பியுள்ளது.

முன்னதாக, மூன்று எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவையும் ஏற்றுக்கொண்டதாக அறிவித்த சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், “ஒரு சட்டமன்ற உறுப்பினர் தனது பதவியை ராஜினாமா செய்யும் போது அதற்கான காரணத்தை தெரிவிக்க வேண்டிய அவசிய மில்லை” என்று தெரிவித்துள் ளார்.

இதன்மூலம் அதிமுக எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 47 இலிருந்து 44 ஆக குறைந்துள் ளது. எடப்பாடி பழனிசாமி அணி யில் தற்போது 27 பேரும், எஸ்.பி. வேலுமணி அணியில் 17 பேரும் இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் 5 எம்.எல்.ஏ.க்கள் விரை வில் ராஜினாமா செய்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய லாம் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

மற்றொரு புறத்தில், எஸ்.பி. வேலுமணி அணியில் இருந்த அந்தியூர் ஹரிபாஸ்கர், ஆற்காடு சுகுமார், சங்கரன்கோவில் திலீபன் ஜெய்சங்கர், காங்கேயம் நடராஜன் மற்றும் பண்ருட்டி மோகன் ஆகிய எம்எல்ஏ-க்கள் எடப்பாடி பழனிசாமி அணிக்கே திரும்பியுள்ளனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.