தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மதுரை கூடல்நகரில் 2-ஆவது ரயில் முனையம் ரயில்வே நிலைக்குழு தலைவரிடம் சு. வெங்கடேசன் எம்.பி. முறையீடு!

7 Jan 2026, 4:05 pm
மதுரை கூடல்நகரில் 2-ஆவது ரயில் முனையம் ரயில்வே நிலைக்குழு தலைவரிடம் சு. வெங்கடேசன் எம்.பி. முறையீடு!
<p><strong>மதுரை கூடல்நகரில் 2-ஆவது ரயில் முனையம் ரயில்வே நிலைக்குழு தலைவரிடம் சு. வெங்கடேசன் எம்.பி. முறையீடு!</strong></p> <p>மதுரை, ஜன. 7 - ரயில்வேக்கான நாடாளு மன்ற நிலைக்குழு தலைவர் சி.எம். ரமேஷிடம், மதுரை ரயில் நிலைய மேம்பாட்டுக்கான கோரிக்கைகள் குறித்து, மதுரை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் எம்.பி. மனு அளித்தார். ரயில்வேக்கான நாடாளு மன்ற நிலைக்குழு தலைவர் சி.எம். ரமேஷ், மதுரை வந்தி ருந்த நிலையில், அவரை நேரில் &nbsp;சந்தித்து சு. வெங்கடேசன் எம்.பி. மனுவை அளித்தார். &ldquo;மதுரை கூடல்நகர் ரயில் நிலையத்தை, இரண்டாவது முனையமாக உடனடியாக மாற்ற வேண்டும்; மதுரை ரயில் &nbsp;நிலையத்தில் உள்ள இட நெருக்கடியின் காரணமாக புதிய ரயில்கள் எதுவும் இயக்க &nbsp;முடியாத நிலை உள்ளது; &nbsp;எனவே, சரக்கு ரயில்களுக் கான தனி புறவழிச்சாலையை உருவாக்க வேண்டியது காலத் தின் கட்டாயமாக உள்ளது. எனவே சோழவந்தான் - சிவ ரக்கோட்டை வழியாக சரக்கு ரயில்களுக்கான புதிய பை பாஸ் வழியை அமைக்க வேண்டும்&rdquo; என மனுவில் சு. வெங்கடேசன் எம்.பி. வலி யுறுத்தியுள்ளார். தமது இந்த இரண்டு கோரிக்கைகளும் மதுரை மக்க ளின் மிக அடிப்படையான கோரிக்கைகள் என்பதால், &nbsp;இவற்றை, ரயில்வே நாடாளு மன்ற நிலைக்குழுவானது, ரயில்வே துறைக்கும், ஒன்றிய அரசுக்கும் பரிந்துரை செய்து அனுப்ப வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.