செங்கல்பட்டு மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வு 29,500 மாணவர்கள் தேர்வு எழுதினர்
2 Mar 2026, 3:30 pm
<p><strong>செங்கல்பட்டு மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வு 29,500 மாணவர்கள் தேர்வு எழுதினர்</strong></p>
<p>செங்கல்பட்டு, மார்ச் 2- செங்கல்பட்டு மாவட்ட த்தில் 2025 - 2026 ஆம் கல்வியாண்டில் மேல்நிலை இரண்டாம் ஆண்டுத் தேர்வை அரசு பள்ளிகள் 81, அரசு உதவி பெறும் பள்ளிகள் 21, மெட்ரிக் பள்ளிகள் 135 என மொத்தம் 237 பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் 13,893, மாணவிகள் 15,544 பேர் என மொத்தம் 29,437 பேர் எழுதுகிறார்கள். இவர்களுக்காக 91 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 10-ஆம் வகுப்புத் தேர்வு அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள் என மொத்தம் 183 பள்ளிகளில் பயிலும் 30,222 மாணவ மாணவிகள் 113 தேர்வு மையங்களில் தேர்வு எழுதுகின்றனர். தேர்வினைச் சிறப்பாக நடத்துவதற்கு அனைத்து ஆயத்த ஏற்பாடுகளும் முழுமையாகச் செய்யப் பட்டுள்ளன. மாணவர்கள் எளிதில் தேர்வு மையத்தை அடையும் வகையில் போக்குவரத்து வசதி, தேர்வு மையங்களுக்கான தடையற்ற மின்சாரம், மருத்துவ வசதி, வினாத் தாள்கள் மற்றும் விடைத் தாள்கள் தேர்வு மையங்க ளுக்குக் கொண்டு செல்வ தற்கு ஆயுதம் தாங்கிய பாது காப்பு வசதி அனைத்தும் உரிய துறைகளின் மூலம் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. 23 வழித்தடங்கள் மூலம் வினாத்தாள்கள் தேர்வு மையங்களுக்கு வழங்கப் பட்டு, 3 விடைத்தாள் சேகரிப்பு மையங்களில் சேகரித்து வைக்கப்பட உள்ளது. சொல்வதை எழுதுபவர் சலுகை 143 மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. திங்களன்று (மார்ச் 2) பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கி யுள்ளதை யொட்டி, செங்கல்பட்டு புனித சூசையப்பர் மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவி கள் தேர்வு எழுதுவதை மாவட்ட ஆட்சியர் எஸ்.மாலதி ஹெலன், பார்வை யிட்டு ஆய்வு மேற் கொண்டார். மேலும் மாற்றுத் திறனாளி மாணவ, மாணவி கள் தேர்வெழுதும் அறைக்குத் தேவையான வசதிகள் செய்யப்பட்டு ள்ளதா என ஆய்வு மேற்கொண்டார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருவளர் செல்வி மற்றும் அரசு அலுவலர்கள் உடனி ருந்தனர்.</p>
