தூத்துக்குடியில் மக்கள் குறை களையும் கூட்டத்தில் 293 கோரிக்கை மனுக்கள்
19 Jan 2026, 2:23 pm
<p><strong>தூத்துக்குடியில் மக்கள் குறை களையும் கூட்டத்தில் 293 கோரிக்கை மனுக்கள்</strong></p>
<p>தூத்துக்குடி, ஜன.19- தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தலைமையில் மக்கள் குறை களையும் நாள் கூட்டம் ஜனவரி.19 ல் நடைபெற்றது மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நடந்த கூட்டத்தில், பொது மக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா, பட்டா மாறுதல் உத்தரவு, வரன் முறைப்படுத்தி பட்டா, கலை ஞரின் கனவு இல்லம் திட்ட த்தின் கீழ் வீடு வேண்டி, தொழில் கடனுதவி, முதி யோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 293 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளு மாறு துறைசார்ந்த அலு வலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார். முன்னதாக, மாற்றுத்திற னாளிகளை நேரில் சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 24 கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டு அவர்களின் கோ ரிக்கைகளை கேட்டறிந்தார். இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) லொரைட்டா, மாவட்ட பிற் படுத்தப்பட்டோர் நல அலுவலர் செந்தில்வேல் முருகன், மாவட்ட ஆட்சி யரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) உலகநாதன், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் பிரமநாயகம், துணை ஆட்சியர் (பயிற்சி) மகேந்திரன் மற்றும் அனை த்துத்துறை சார்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.</p>
<p> </p>
