முந்தய பக்கம்

தமுஎகச-வின் 266 ஆவது இலக்கிய சந்திப்பு

14 Dec 2025, 3:45 pm
தமுஎகச-வின் 266 ஆவது இலக்கிய சந்திப்பு
<p><strong>தமுஎகச-வின் 266 ஆவது இலக்கிய சந்திப்பு</strong></p> <p>கோவை, டிச.14- கோவையில் தமுஎகச-வின் 266 &nbsp;ஆவது இலக்கிய சந்திப்பில் கவிதை கள் நூல்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தா ளர் கலைஞர்கள் சங்க கோவை மாவட் டக்குழு சார்பில், 266 ஆவது இலக்கிய &nbsp;சந்திப்பு நிகழ்ச்சி தாமஸ் கிளப்பில் ஞாயி றன்று நடைபெற்றது. இந்நிகழ்விற்கு கவிஞர் உமா மகேஸ்வரி தலைமை வகித்தார். கலைவாணி வரவேற்றார். &lsquo;தலைக்குள் புழு வளர்ப்பவன்&rsquo; என்கிற கவிதை நூலை அறிமுகப்படுத்தி. மாநில துணை பொதுச் செயலாளர் அ.கரீம் பேசினார். கவிஞர் ந.முத்து ஏற்புரையாற்றினார். இதேபோன்று, &lsquo;நீலப் பெருங்கடல்&rsquo; என்கிற கவிதை &nbsp;தொகுப்பை பி.எஸ்.ஜி கல்லூரி &nbsp;பேராசிரியர் பண்புச் செல்வன் அறி முகம் செய்தார். கவிஞர் அய்யப்பன் மாதவன் ஏற்புரையாற்றினார். &lsquo;மீன்பிடி தடைக்காலம்&rsquo; என்கிற கவிதை தொகுப்பை, கதிர் கல்லூரி தமிழ் துறைத்தலைவர் பேராசிரியர் பிரகாஷ் அறிமுகம் செய்து உரையாற்ற, கவி ஞர் சக்தி ஏற்புரையாற்றினார். இந் நிகழ்வில், சங்கத்தின் மாவட்டத் தலை வர் மு.காளிநாதன் மற்றும் எழுத்தா ளர்கள், கலை இலக்கிய ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். முடிவில், சாந்தா ரம் நன்றி கூறினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram