முந்தய பக்கம்

உடுமலை பொய் வழக்கிலிருந்து 26 பேர் விடுதலை

1 Dec 2025, 5:20 pm
உடுமலை பொய் வழக்கிலிருந்து 26 பேர் விடுதலை
<p><strong>உடுமலை பொய் வழக்கிலிருந்து 26 பேர் விடுதலை</strong></p> <p>திருப்பூர், டிச.1 &ndash; உடுமலைபேட்டை அனைத்து மகளிர் காவல் நிலை யத்தில், பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு ஆதரவாக நியாயம் கேட்க மாதர் சங்கத்தினருடன் சென்றவர்கள் 26 பேர் மீது பொய் &nbsp;வழக்குப் பதிவு செய்தனர். ஏழாண்டுகளுக்குப் பிறகு இந்த &nbsp;பொய் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு அனைவரும் விடுவிக் கப்பட்டனர். கடந்த 2017ஆம் ஆண்டு, மடத்துக்குளம் தாலுகாவைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது கணவர் துன்புறுத்துவதாக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். &nbsp;எனினும் இந்த வழக்கை விசாரிக்காமல் மகளிர் காவல் நிலை யத்தில் தாமதம் செய்த நிலையில் மாதர் சங்கத்தினரிடம் அந்த &nbsp;பெண் முறையிட்டார். எனவே மாதர் சங்க நிர்வாகிகள் மகளிர் &nbsp;காவல் நிலையத்திற்குச் சென்று காவல் ஆய்வாளரை சந் தித்து இது குறித்து நியாயம் கேட்டுள்ளனர். ஆனால் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மாதர் சங்க &nbsp;நிர்வாகிகளை தோளைப் பிடித்து தள்ளி வெளியேறும்படி கூறி அவமரியாதை செய்தார். இதையடுத்து பாதிக்கப் பட்டவருக்கு நியாயம் கேட்க மாதர் சங்கத்தினர் வந்தால் அவ மரியாதை செய்வதா என்று மாதர் சங்கத்தினர், மார்க்சிஸ்ட் &nbsp;கட்சியினர் காவல் நிலையத்தில் திரண்டனர். இது தொடர்பாக உடுமலை காவல் நிலையத்தில் நியாயம் &nbsp;கேட்கச் சென்றவர்கள் மீது பொய் வழக்குப் பதிவு செய்யப்பட் டது. இந்த வழக்கு உடுமலை ஜே.எம்.1 நீதித்துறை நடுவர் &nbsp;மன்றத்தில் கடந்த ஏழாண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வந்தது. திங்களன்று நீதித்துறை நடுவர், இந்த வழக்கை ரத்து &nbsp;செய்து 26 பேரையும் விடுவித்தார். இந்த வழக்கில் வாதாடிய &nbsp;வழக்கறிஞர்கள் சிவக்குமார், ரமேஷ் ஆகியோருக்கு அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்கம், மார்க்சிஸ்ட் கட்சியின் உடு மலை, குடிமங்கலம் கமிட்டிகள் சார்பில் நன்றி தெரிவித்த னர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram