செலக்சன் கல்வி குழுமங்களின் 25 ஆவது ஆண்டு விழா
9 Feb 2026, 3:02 pm
<p><strong>செலக்சன் கல்வி குழுமங்களின் 25 ஆவது ஆண்டு விழா</strong></p>
<p>அறந்தாங்கி, பிப்.9- புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நமது செலக்சன் கல்வி குழுமங்களின் 25 ஆவது ஆண்டு வெள்ளி விழா நிகழ்ச்சி, பள்ளி வளாகத்தில் இரண்டு நாள் நடைபெற்றது. பள்ளி தாளாளர் கண்ணையன் தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் சுரேஷ் குமார் வரவேற்றுப் பேசினார். முதல்நாள் நிகழ்ச்சியாக இலக்கிய விழாவும் இரண்டாம் நாளில் கலை விழாவும் கொண்டாடப்பட்டது. இலக்கிய விழாவில் சிறப்பு பட்டிமன்றம் சொல்வேந்தர் சுகி சிவம் தலைமையில், இன்றைய நிலையில் இளைஞர்களின் வளர்ச்சியில் அதிகம் பங்கேற்பது வீடா- நாடா என்ற தலைப்பில் நடைபெற்றது. பட்டிமன்ற குழுவில் விஜயசுந்தரி, சாத்தமைபிரியா, சிவ குருநாதன், நீலகண்டன் ஆகியோர் பேச்சாளர்களாக கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து இரண்டாம் நாளில் கலை விழா நடைபெற்றது. இதில் தொலைக்காட்சித் தொடர் நடிகர் அன்பு, மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பரிசுகளை வழங்கினார். பட்டிமன்றம் பேச்சாளர் டாக்டர் எழிலரசி, பெற்றோர்களுக்கும், மாணவர்களுக்கும் பயனுள்ள கருத்துகளை கூறினார். நிகழ்ச்சியில் புதுகை பாரதி, அறந்தாங்கி ரோட்டரி கிளப்பின் தலைவர் ரவிசங்கர், முன்னாள் தலைவர்கள் பீர் சேக், ஆறுமுகம், நகர்மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. துணை முதல்வர் கங்கா நன்றி கூறினார்.</p>
