ஆம்னி பேருந்தில் பயணியிடம் 255 கிராம் தங்க நகைகளை பறிமுதல்
18 Mar 2026, 3:34 pm
<p><strong>ஆம்னி பேருந்தில் பயணியிடம் 255 கிராம் தங்க நகைகளை பறிமுதல்</strong></p>
<p>கோவை, மார்ச். 18- சிந்தாமணிபுதூர் டோல்கேட் பகுதியில் ஆம்னி பேருந்தில் நடத் திய சோதனையில் பயணி ஒருவ ரிடமிருந்து சுமார் 255 கிராம் தங்க நகைகளை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். கோவை மாவட்டம், சிந்தா மணிபுதூர் டோல்கேட் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் மற் றும் காவல்துறையினர் புதனன்று தீவிர வாகன சோதனையில் ஈடு பட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஆம்னி பேருந்து ஒன்றை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் பயணம் செய்த நபர் ஒருவர் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியது அதிகாரிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இத னைத் தொடர்ந்து அந்த நபரிடம் நடத்திய சோதனை யில், அவர் உரிய ஆவணங்களின்றி சுமார் 255 கிராம் தங்க நகைகளை மறைத்து எடுத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் அவர் கோயம்புத்தூர் சித்தி விநாயகர் கோவில் வீதி, மங்களா ஜூவல்லரி கட்டடத்தில் வசித்து வரும் அனுப் ராணா (37) என்பது தெரியவந்தது. பறிமுதல் செய்யப் பட்ட இந்த தங்க நகைகளின் மதிப்பு சுமார் 37 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. எவ்வித முறை யான ஆவணங்களும் இல்லாத காரணத்தினால், அந்த நகை கள் அனைத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின் னர் கைப்பற்றப்பட்ட நகைகள் பாதுகாப்பாக சூலூர் தாலுகா அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டன. இதுகுறித்து வரு வாய்த்துறை மற்றும் தேர்தல் பிரிவு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.</p>
