தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மகாராஷ்டிரா மாநிலத்திலிருந்துநாமக்கல் வந்த 2,500 டன் சர்க்கரை

7 Jun 2026, 12:15 am
மகாராஷ்டிரா மாநிலத்திலிருந்துநாமக்கல் வந்த 2,500 டன் சர்க்கரை
<p><strong>மகாராஷ்டிரா மாநிலத்திலிருந்துநாமக்கல் வந்த 2,500 டன் சர்க்கரை</strong></p><p>நாமக்கல், ஜூன் 6- நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்கு தேவையான 2,500 டன் சர்க்கரை மராட்டிய மாநிலத்தில் இருந்து சரக்கு ரயில் மூலம் நாமக்கல் ரயில் நிலையத் திற்கு கொண்டு வரப்பட்டது. நாமக்கல் மாவட்டத்தில் பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் ரேஷன் கடைகளுக்கு தேவையான அரிசி, கோதுமை, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்கள் வெளிமாநிலங்களில் இருந்து மொத்த மாக கொள்முதல் செய்யப்பட்டு ரயில் மார்க்கமாக கொண்டு வரப்படுகின்றன. அதேபோல் மாவட்டத்தின் முக்கிய தொழி லாக விளங்கும் கோழிப்பண்ணைகளுக்கு தேவையான மக்காச்சோளம், தவிடு, சோயா, கடுகு புண்ணாக்கு உள்ளிட்ட தீவன மூலப்பொருட்களும் பெரும்பாலும் வட மாநிலங்களில் இருந்து சரக்கு ரயில்கள் மூலம் நாமக் கல்லுக்கு அனுப்பப்படுகின்றன. இந்நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளுக்கும் தேவையான சர்க்கரையை வழங்கும் வகையில் மராட்டிய மாநிலத்தில் உள்ள குட்மார்கட் பகுதி யில் இருந்து 2,500 டன் சர்க்கரை ஏற்றப்பட்ட சரக்கு ரயில் நாமக்கல் ரயில் நிலையத்திற்கு வெள்ளியன்று வந்தடைந் தது. 42 வேகன்களை கொண்ட இந்த சரக்கு ரயிலில் ஆயிரக் கணக்கான சர்க்கரை மூட்டைகள் ஏற்றி அனுப்பப்பட்டி ருந்தன. ரயில் நிலையத்தை வந்தடைந்ததும் தொழிலா ளர்கள் உதவியுடன் சர்க்கரை மூட்டைகள் இறக்கும் பணி தீவிரமாக நடைபெற்றது. பின்னர் அவை 100-க்கும் மேற்பட்ட லாரிகளில் ஏற்றப்பட்டு நாமக்கல் அருகே மரூர்பட்டியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக குடோ னுக்கு கொண்டு செல்லப்பட்டன. அங்கு சேமித்து வைக்கப்படும் சர்க்கரை, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வரும் ரேஷன் கடைக ளுக்கு தேவைக்கேற்ப படிப்படியாக அனுப்பி வைக்கப்பட உள்ளது. இதன் மூலம் பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு தடையின்றி சர்க்கரை வழங்க நடவ டிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சரக்கு ரயில் மூலம் ஒரே நேரத் தில் அதிகளவிலான பொருட்கள் கொண்டு வரப்படுவ தால் போக்குவரத்து செலவு குறைவதுடன், பொருட்கள் விரைவாகவும் பாதுகாப்பாகவும் இலக்கை சென்றடைவ தாக அதிகாரிகள் தெரிவித்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.