தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

25 ஆண்டுகளுக்குப் பிறகு தூத்துக்குடி தேரி காட்டில் “மெழுகுப் புலி வண்டு”

22 Dec 2025, 2:53 pm
25 ஆண்டுகளுக்குப் பிறகு  தூத்துக்குடி தேரி காட்டில் “மெழுகுப் புலி வண்டு”
<p><strong>25 ஆண்டுகளுக்குப் பிறகு தூத்துக்குடி தேரி காட்டில் &ldquo;மெழுகுப் புலி வண்டு&rdquo;</strong></p> <p>தூத்துக்குடி, டிச. 22- 25 ஆண்டுகளுக்குப் பிறகு தூத்துக்குடி மாவட்டம் செம்மண் தேரி காட்டில் மிகவும் அரிதான மற்றும் அழியும் நிலையில் உள்ள &lsquo;மெழுகுப் புலி வண்டு&rsquo; (Waxen Tiger Beetle) கண்டறியப்பட்டுள்ளது. இந்த &nbsp;மெழுகுப் புலி வண்டு தூத்துக்குடி யில் கடைசியாக 2000ஆம் ஆண்டு காணப்பட்டது. &nbsp;இத்தகைய சூழலில், 25 ஆண்டு களுக்குப் பிறகு குதிரைமொழி தேரி காட்டின் பல்வேறு பகுதிகளில் ஆய்வாளர்கள் கே.பி. அரவிந்தன் மற்றும் சாம்சன் கிருபாகரன் ஆகி யோரின் ஆய்வில் மெழுகுப் புலி வண்டு இருப்பது &nbsp;கண்டறியப் பட்டுள்ளது. பெங்களூரு தேசிய உயி ரியல் அறிவியல் மையத்தின் மாணவர் அரவிந்தன், நவம்பர் 19 அன்று குதிரை மொழி தேரி காட்டுப் பகுதியில் மெழு குப் புலி வண்டின் புகைப்படத்தை வெளியிட்டார். தொடர்ந்து டிசம்பர் 14 அன்று சாம்சன் கிருபாகரன் &nbsp;அருஞ் சுனை காத்த அய்யனார் கோவில் அருகே கண்டறிந்தார். இதுதொடர்பாக ஆய்வாளர் அர விந்தன் கூறுகையில்,&rdquo;இந்த வண்டு மிக வேகமாக நகரக்கூடியது மற்றும் பிற பூச்சிகளை வேட்டையாடி உண்ணும் இயல்புடையது. இது செம்மண்ணோடு ஒன்றிப்போகும் நிறத்தைக் கொண்டுள்ளது. இதன் உடல் செம்பு-சிவப்பு நிறத்திலும், இறக்கைப் பகுதி மெழுகு போன்ற பள பளப்பான மஞ்சள்-ஆரஞ்சு நிறத்தி லும் இருக்கும். மேலும், இதன் உட லில் ஐந்து தனித்துவமான கோபால்ட் நீல நிறப் புள்ளிகள் உள்ளன&rdquo; என அவர் கூறினார். டைகர்பீட்டில்வாட்ச் நிறுவனர் வி.சரண் கூறுகையில்,&rdquo;தேரி காட்டில் மெழுகுப் புலி வண்டு கண்டுபிடிப்பு புதிய மைல்கல் ஆகும். நாட்டில் வேக மாக மறைந்து வரும் கடலோர மணற்குன்று சுற்றுச்சூழல் அமைப்பு களைப் பாதுகாப்பதற்கான திட்டங் களை வலுப்படுத்த இந்த கண்டு பிடிப்பு ஒரு முக்கிய ஆதாரமாக அமையும்&rdquo; என அவர் கூறினார். &nbsp;1986 மற்றும் 2000-க்கு இடையில் சேகரிக்கப்பட்ட மெழுகுப் புலி வண்டு மாதிரிகள் ஜெர்மனியின் மியூ னிக் நகரில் உள்ள விலங்கியல் அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப் பட்டு வருகின்றன. அக்டோபர் 2000க்குப் பிறகு மெழுகுப் புலி வண்டு &nbsp;எங்கும் தென்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.