தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தமிழக தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க 25 அம்சக் கோரிக்கைகள்

9 Jun 2026, 7:57 pm
தமிழக தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க 25 அம்சக் கோரிக்கைகள்

தமிழக தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க 25 அம்சக் கோரிக்கைகள்

முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்யிடம் சிஐடியு தலைவர்கள் நேரில் வலியுறுத்தல்

சென்னை, ஜூன் 9- தமிழ்நாடு முழுவதுமுள்ள பொதுத்துறை, தனியார் துறை மற்றும் முறைசாராத் துறை தொழிலாளர்களின் நீண்டகாலப் பிரச்சனைகள் மற்றும் வாழ்வாதாரக் கோரிக்கைகளுக்கு உடனடித் தீர்வுகாண வலியுறுத்தி, சிஐடியு அகில இந்திய மற்றும் மாநிலத் தலைவர்கள் அடங்கிய பிரதிநிதிகள் குழுவினர் முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்யை நேரில் சந்தித்து விரிவான கோரிக்கை மனுவை அளித்துள்ளனர். சென்னை தலைமைச் செயலகத்தில் திங்களன்று (ஜூன் 8) நடைபெற்ற இந்தச் சந்திப்பிற்குச் சிஐடியு அகில இந்தியத் துணைத் தலைவர் அ.சவுந்தரராசன் தலைமை தாங்கினார். மாநிலத் தலைவர் ஜி.சுகுமாறன், மாநிலப் பொதுச்செயலாளர் எஸ்.கண்ணன், மாநிலப் பொருளாளர் எஸ்.ராஜேந்திரன் ஆகியோர் அடங்கிய குழுவினர் முதலமைச்சரிடம் இந்த 25 அம்சக் கோரிக்கை மனுவை நேரில் அளித்து விவாதித்தனர். அந்த மனுவில் இடம்பெற்றுள்ள முக்கியக் கோரிக்கைகளின் முழு விவரம் வருமாறு:

1. தொழிலாளர் நலத்துறை மற்றும் காலிப்பணியிடங்கள்

தமிழகத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் கீழ் இயங்கும் தொழிலாளர் ஆணையரகம், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் ஆகிய அமைப்புகளின் செயல்பாடுகளை மேம்படுத்த வேண்டும். தொழிலாளர் துறையில் தேங்கிக் கிடக்கும் தொழிற் தாவாக்கள் மற்றும் சமரசப் பேச்சுவார்த்தைகளை ஒரு குறிப்பிட்ட கால வரம்பிற்குள் முடிவுக்குக் கொண்டு வர வேண்டும். தொழிற்சாலைகளில் விபத்துகள் ஏற்படா வண்ணம் பாதுகாப்பை உறுதி செய்யவும், தொழிலாளர் சட்டங்கள் முறையாக அமலாக்கப்படுவதைக் கண்காணிக்கவும், இத்துறைகளில் பல ஆண்டுகளாக நிலவும் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.

2. ஒன்றிய அரசின் 4 தொழிலாளர் தொகுப்புச் சட்டங்களுக்கு எதிர்ப்பு

நூறாண்டுகளாகத் தொழிலாளர்கள் போராடிப் பெற்ற 29 தொழிலாளர் சட்டங்களைச் சுருக்கி, அவர்களுக்குப் பாதகமான முறையில் ஒன்றிய பாஜக அரசு கொண்டுவந்துள்ள ஊதியம், தொழிலுறவு, சமூக பாதுகாப்பு மற்றும் பணியிட பாதுகாப்பு ஆகிய 4 புதிய தொழிலாளர் தொகுப்புச் சட்டங்களை தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்துவதைக் கைவிட வேண்டும். இதற்கு எதிராக வரவிருக்கும் சட்டமன்றக் கூட்டத்தொடரில் தமிழக அரசு தனித் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். முந்தைய அரசு உருவாக்கிய அமலாக்க விதிகளில், சிஐடியு அமைப்பு அளித்த திருத்தங்களை முழுமையாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.

3. பன்னாட்டு நிறுவனங்களின் பழிவாங்கல் நடவடிக்கைகளைத்

தடுத்தல் தமிழகத்தில் இயங்கி வரும் உள்நாட்டு மற்றும் பன்னாட்டு நிறுவனங்களில் தொழிலாளர்கள் சட்டப்படி சங்கம் அமைத்த ஒரே காரணத்திற்காக, ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிநீக்கம், பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்), பழிவாங்கல் இடமாற்றம் மற்றும் சம்பளப் பிடித்தம் போன்ற நடவடிக்கைகளுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். இத்தகைய பிரச்சனைகளில் தொழிலாளர் துறை நடத்தும் சமரசப் பேச்சுவார்த்தைகளில் பங்கேற்காமல் பன்னாட்டு நிர்வாகங்கள் அரசை உதாசீனப்படுத்துகின்றன. குறிப்பாக, சென்னை சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பன்னாட்டு நிறுவனங்களின் தொழிலாளர் விரோதப் போக்கினால் வேலையிழந்து தவிக்கும் 1,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் தொழிற்தாவாக்களை முடிவுக்குக் கொண்டுவந்து, அவர்களுக்கு மீண்டும் வேலை கிடைக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

4. முத்தரப்புக் குழுக்களை அமைத்து தொழிற்சங்கங்களுக்கு பிரதிநிதித்துவம் தருதல்

மாநில தொழிலாளர் ஆலோசனை வாரியம், தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம், குறைந்தபட்ச கூலி ஆலோசனைக் குழு, ஒப்பந்தத் தொழிலாளர் முறைப்படுத்தல் குழு, தொழிலாளர் ஈட்டுறுதித் திட்டம் (ESI), வருங்கால வைப்புநிதித் திட்டம் (EPF) மற்றும் 21 முறைசாராத் தொழிலாளர் நல வாரியங்கள் உள்ளிட்ட முத்தரப்புக் குழுக்கள் தற்போது முழுமையாக அமைக்கப்படாமல் முடங்கியுள்ளன. இதனால் தொழிலாளர் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முடியாத நிலை உள்ளது. தொழிலாளர் நலத்துறை ஜனநாயக ரீதியாகச் செயல்பட இந்த முத்தரப்புக் குழுக்களை உடனடியாக அமைப்பதோடு, அவற்றில் சிஐடியு உள்ளிட்ட மத்திய தொழிற்சங்கங்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும்.

5. அடிப்படைத் தொழிலாளர் சட்டங்களை அமல்படுத்துதல்

தமிழகத்தில் உள்ள பெரும்பாலான நிறுவனங்களில் குறைந்தபட்ச ஊதியம், ஒப்பந்தத் தொழிலாளர் (நீக்குதல் - முறைப்படுத்தல்) சட்டம், கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டம், 8 மணி நேர வேலை, சம வேலைக்குச் சம ஊதியம், வார விடுமுறை மற்றும் தேசிய பண்டிகை விடுமுறைச் சட்டம், மகப்பேறு நலச் சட்டம் போன்ற சட்டப்பூர்வ உரிமைகள் அமலாவதில்லை. 8 மணி நேரத்திற்கு மேல் வாங்கப்படும் வேலைக்குச் சட்டப்படியான மிகைநேர ஊதியம் (Overtime Wages) வழங்கப்படுவதை அரசு ஆய்வு நடத்தி உறுதிப்படுத்த வேண்டும்.

6. குறைந்தபட்ச ஊதியம் ரூ.26,000 நிர்ணயித்தல்

கடுமையாக உயர்ந்து வரும் விலைவாசி உயர்வைக் கணக்கில் கொண்டு, தமிழகத்தில் உள்ள அனைத்துப் பிரிவு தொழிலாளர்களுக்கும் மாதக் குறைந்தபட்ச ஊதியமாக 26,000 ரூபாய் நிர்ணயம் செய்து அரசாணை வெளியிட வேண்டும். தொழிலாளர் நலத்துறை அட்டவணைப்படுத்தியுள்ள 69-க்கும் மேற்பட்ட தொழில்களுக்கான குறைந்தபட்ச ஊதியத்தை, சராசரியாக 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை விலைவாசிப் புள்ளிக்கு ஏற்ப மறுநிர்ணயம் செய்ய வேண்டும்

7. முறைசாராத் தொழிலாளர் நல வாரியங்களைப் பாதுகாத்தல்

கட்டுமானம், சுமைப்பணி, தையல், முடிதிருத்துவோர், சலவை, ஆட்டோ, கனரக வாகன ஓட்டுநர்கள் உள்ளிட்ட 21 அமைப்புசாரா நல வாரியங்களில் 70 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இவைகளை முடக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள ஒன்றிய அரசின் சமூக பாதுகாப்புத் தொகுப்புச் சட்ட விதிகளைத் தமிழகத்தில் அனுமதிக்கக் கூடாது. • உடலுழைப்புத் தொழிலாளர் சட்டம் 1982-இல் திருத்தம் கொண்டுவந்து, அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்கள் மட்டுமே பதிவு விண்ணப்பங்களில் சான்றளிக்க அதிகாரம் வழங்க வேண்டும். • வாரியத்தில் விண்ணப்பித்த நாளிலிருந்தே பயனாளியாகக் கணக்கிட வேண்டும். கட்டுமான வாரியத்தைப் போன்றே இதர 20 அமைப்புசாரா வாரியங்களுக்கும் ஒரே மாதிரியான நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும். • வாரியங்களின் நிதியை வேறு பணிகளுக்குப் பயன்படுத்துவதைத் தடுத்து, மாவட்ட கண்காணிப்புக் குழுக்களில் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கு இடம் தர வேண்டும். இதர வாரியங்களுக்கும் செஸ் (Cess) நிதி திரட்ட வேண்டும்.

8. தொழிலாளர்கள் மீதான வழக்குகளைத் திரும்பப் பெறுதல்

பொது மற்றும் தனியார் துறை நிறுவனங்களில் தங்களின் நியாயமான உரிமைகளுக்காக ஜனநாயக ரீதியிலும், அமைதியான முறையிலும் போராட்டங்கள் நடத்திய தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்கத் தலைவர்கள் மீது காவல்துறை பதிவு செய்துள்ள அரசியல் வழக்குகளை முதலமைச்சர் தலையிட்டு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.

9. புலம்பெயர் தொழிலாளர் பாதுகாப்பு

தமிழ்நாட்டில் தொழிற்சாலைகள், கட்டுமானம், உணவகங்கள் உள்ளிட்ட துறைகளில் பணிபுரியும் லட்சக்கணக்கான வெளிமாநிலப் புலம்பெயர் தொழிலாளர்கள் குறைந்த கூலி, விபத்து மற்றும் மரணப் பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். ‘புலம்பெயர் தொழிலாளர் சட்டத்தின்’ கீழ் இவர்களது பணி நிலைமைகளைப் பாதுகாப்பதற்கான கண்காணிப்பைத் தீவிரப்படுத்த வேண்டும்.

10. பெண் தொழிலாளர்களின் உரிமைகள் மற்றும் சலுகைகள்

பெண் தொழிலாளர்களுக்குச் சம வேலைக்குச் சம ஊதியம் மற்றும் மகப்பேறு சட்டப்பலன்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தல்களைத் தடுக்கப் புகார் கமிட்டிகள் (ICC) அமைக்கப்படுவதோடு கழிப்பறை, ஓய்வறை, குழந்தைகள் காப்பக வசதிகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். பெண் தொழிலாளர்களுக்கு இயற்கையான மாதவிடாய் நாட்களில் சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்க அரசு ஆவண செய்ய வேண்டும். மேலும், வணிக வளாகங்கள் மற்றும் கடைகளில் பெண் தொழிலாளர்கள் அமர்வதற்கான இருக்கை வசதி அரசாணை (Right to Sit) அமலாவதைக் கண்காணிக்க வேண்டும்.

11. மாநிலம் முழுவதும் சீரான தொழில் வளர்ச்சி

தமிழகத்தின் தொழில் முதலீடுகள் மற்றும் வேலைவாய்ப்புகள் அனைத்தும் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களையே மையப்படுத்துவதைத் தடுத்து, ஒன்றுபட்ட தஞ்சை, ஒன்றுபட்ட மதுரை, நெல்லை உள்ளிட்ட பிற மாவட்டங்களிலும் தொழிற்பேட்டைகளை உருவாக்கிச் சீரான தொழில் வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும்.

12. காலிப்பணியிடங்கள் நிரப்பல் மற்றும் பணி நிரந்தரம்

அரசுத் துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ள லட்சக்கணக்கான காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். ஒப்பந்தமுறை, வெளிமுகமை (Outsourcing), தொகுப்பூதியம், மதிப்பூதியம் என்ற பெயரில் மிகக் குறைந்த ஊதியத்தில் 10 ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ச்சியாகப் பணிபுரிந்து வரும் ஊழியர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

13. ஆட்டோ ரிக்சா தொழிலை முறைப்படுத்துதல்

தலைநகர் சென்னையில் மட்டும் 1 லட்சம் பேர் உட்படத் தமிழகம் முழுவதும் உள்ள ஆட்டோ தொழிலை முறைப்படுத்த, புதிய மீட்டர் கட்டணத்தை அரசே மாற்றி அமைக்க வேண்டும். ஓலா, உபர், ரேபிடோ போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களின் சுரண்டலைக் கட்டுப்படுத்தி, அரசுத் தரப்பிலேயே பிரத்யேகச் செயலியை (App) உருவாக்கி மக்களுக்கு நியாயமான கட்டணத்தில் சேவை வழங்க வேண்டும்.

14. அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்களின் வாழ்வாதாரம்

போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊதிய ஒப்பந்த அடிப்படையில் ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும். கடந்த 2025-ஆம் ஆண்டு மே மாதம் ஏற்பட்ட ஒப்பந்தப்படியான 9 மாத கால நிலுவைத்தொகையையும், 15 மாதங்களுக்கும் மேலாக நிலுவையில் உள்ள அகவிலைப்படி (DA) உயர்வையும் முழுமையாக வழங்க வேண்டும். பேருந்துப் பணி ஒதுக்கீட்டில் நடக்கும் முறைகேடுகளைத் தடுத்துப் பாகுபாடற்ற முறையை நடைமுறைப்படுத்த வேண்டும்.

15. மின்சார வாரியத்தைப் பொதுத்துறையாகப் பாதுகாத்தல்

மின்சார வாரியத்தில் நிலவும் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். மின் உற்பத்தி, கட்டுமானம் மற்றும் விநியோகப் பிரிவுகளில் பல பத்தாண்டுகளாகப் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தரப்படுத்துவதன் மூலமே தடையில்லா மின்சாரத்தை வழங்க முடியும். மின்சாரத் துறையைத் தொடர்ந்து பொதுத்துறையாகவே நீடிக்கச் செய்ய வேண்டும்; நுகர்வோரைப் பாதிக்கும் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தைக் கைவிட வேண்டும்.

16. உள்ளாட்சி அடிமட்டத் தொழிலாளர்களுக்குக் காலமுறை ஊதியம்

மாநகராட்சி, நகராட்சி மற்றும் ஊராட்சிகளில் தூய்மைப் பணி, குடிநீர்த் தொட்டி இயக்குபவர்கள், பள்ளித் தூய்மைப் பணியாளர்களுக்குக் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். தூய்மைக் காவலர்கள், டெங்கு கொசு ஒழிப்பு ஊழியர்கள் மற்றும் அரசு மருத்து வக் கல்லூரி ஹவுஸ் கீப்பிங் ஊழியர்களுக்கு உயர்நீதி மன்றத் தீர்ப்பின்படி குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்தி வழங்கி, பணிப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

17. கூட்டுறவு அமைப்புகளின் தன்னாட்சி பாதுகாப்பு

கூட்டுறவுத் துறையில் பல்லாண்டு காலமாகப் பணிபுரியும் ஊழியர்களின் பணியை வரன்முறைப்படுத்தி, காலமுறை ஊதியம் மற்றும் கருணை ஓய்வூதியம் வழங்க வேண்டும். மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கூட்டுறவு அமைப்புகளைத் தங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு செல்லத் துடிக்கும் ஒன்றிய அரசின் சட்ட முயற்சிகளைத் தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.

18. பஞ்சாலைத் தொழிலாளர்களின் ஊதிய சீரமைப்பு

கூட்டுறவுப் பஞ்சாலைகளில் தினக்கூலி மற்றும் ஒப்பந்த முறையில் பணிபுரியும் தொழிலாளர்களைப் பணி வரன்முறைப்படுத்த வேண்டும். பஞ்சாலைத் தொழிலாளர்களுக்கு 25 ஆண்டுகளுக்கு மேலாகக் குறைந்தபட்ச ஊதியம் வரையறை செய்யப்படாமல் உள்ள அவலத்தைப் போக்க வேண்டும். மேலும், ஒன்றிய அரசு மூடியுள்ள தேசிய பஞ்சாலைக் கழக (NTC) ஆலைகளை மீண்டும் திறக்கத் தேவையான அழுத்தத்தைத் தர வேண்டும்.

19. விசைத்தறித் தொழிலாளர் பாதுகாப்பு

நெருக்கடியில் சிக்கியுள்ள விசைத்தறித் தொழிலில் போதிய வருமானமின்றி, கந்துவட்டிக் கொடுமையால் தொழிலாளர்கள் தற்கொலை செய்துகொள்ளும் அவல நிலையை முற்றிலும் ஒழிக்க வேண்டும். விசைத்தறித் தொழிலாளர்களுக்கான கூலி உயர்வு மற்றும் வாழ்வாதாரப் பாதுகாப்புத் திட்டங்களை அரசு செயல்படுத்த வேண்டும்.

20. குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்களுக்கு போனஸ்

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய (TWAD) ஊழியர்களுக்கும், அங்குள்ள ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கும் இதர பொதுத்துறை நிறுவனங்களுக்கு இணையான போனஸ் தொகையை வழங்க வேண்டும். புதிய திட்ட மதிப்பீடுகளைத் தயாரிக்கும் போதே ஊழியர்களின் முறையான ஊதிய விகிதம் மற்றும் எண்ணிக்கையைச் சேர்க்க வழிவகை செய்ய வேண்டும்.

21. டாஸ்மாக் ஊழியர்களுக்கு நிலையாணைச் சட்டம்

டாஸ்மாக் சில்லரை விற்பனைக் கடைகளில் 23 ஆண்டுகளாகப் பணிபுரியும் ஊழியர்களின் நீண்டகாலக் கோரிக்கையான பணி வரன்முறை மற்றும் காலமுறை ஊதியத்தை வழங்க வேண்டும். நிலையாணைச் சட்டப்படி பணி விதிகளை உருவாக்கி மிகைநேர ஊதியம், வார விடுமுறை ஊதியம் ஆகியவற்றை வழங்க வேண்டும் எனத் தொழிலாளர் நீதிமன்றங்கள் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவுகளுக்கு எதிராக அரசு தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும்.

22. அங்கன்வாடி ஊழியர்களின் பணிவரன்முறை

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் (ICDS) கீழ் அங்கன்வாடி மையங்களில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களைப் பணி வரன்முறைப்படுத்தி, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். நிலுவையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பி, பணிக்கொடை மற்றும் பதவி உயர்வுகளைத் தடையின்றி வழங்க வேண்டும்.

23. மக்களைத் தேடி மருத்துவம் மற்றும் கிக் தொழிலாளர்கள்

• பெண் ஊழியர்களை மட்டுமே கொண்டு இயங்கும் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தில் ஊக்கத்தொகை முறையை ஒழித்து, நியாயமான காலமுறை ஊதியமும், மகப்பேறு விடுப்பு, மருத்துவ விடுப்பு, பணிக்கொடை உள்ளிட்ட சட்டப்பூர்வ உரிமைகளையும் வழங்க வேண்டும். • வீடு தேடி உணவு மற்றும் பொருட்கள் விநியோகம் செய்யும் கிக் (Gig) தொழிலாளர்களின் நலனைப் பாதுகாக்க ‘முதலாளி-தொழிலாளி’ உறவுமுறையைச் சட்ட வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும். 10 அல்லது 12 நிமிடங்களுக்குள் பொருட்களை விநியோகிக்க வேண்டும் என்ற நிறுவனங்களின் ஆபத்தான நிபந்தனைகளைத் தடுத்து, விபத்து மரணங்களைத் தவிர்க்க இத்தொழிலை முறைப்படுத்த வேண்டும்.

24. மே தினத்தை அரசு விழாவாகக் கொண்டாடுதல்

உழைக்கும் வர்க்கத்தின் உரிமை நாளான மே தினத்தை இந்தியாவில் முதன்முதலாக 1923 மே 1 அன்று மெரினா கடற்கரையில் ஏற்றிவைத்தவர் சிந்தனைச் சிற்பி ம.சிங்காரவேலர் ஆவார். உலகப் பிரசித்தி பெற்ற அந்த உழைப்பாளர் சிலை அருகிலேயே ஆண்டுதோறும் மே 1-ஆம் தேதியை ‘உழைக்கும் வர்க்கத்தின் உரிமை நாளாக’ அரசு விழாவாகத் தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக நடத்த வேண்டும்.

25. மெட்ராஸ் லேபர் யூனியன் கட்டிடத்தைத் தொழிற்சங்க மணிமண்டபமாக்கல்

இந்தியாவில் சட்டப்படி பதிவுசெய்யப்பட்ட முதல் தொழிற்சங்கமான ‘மெட்ராஸ் லேபர் யூனியன்’ பெரம்பூர் பட்டாளம் பகுதியில் பாழடைந்த நிலையில் உள்ளது. திரு.வி.க., சிங்காரவேலர், சர்க்கரை செட்டியார், அன்னிபெசன்ட் அம்மையார் போன்ற ஆளுமைகள் வழிநடத்திய இந்தக் வரலாற்றுச் சிறப்புமிக்கக் கட்டிடத்தை அரசுடைமையாக்கி, ‘தொழிற்சங்க மணிமண்டபமாக’ மாற்றி, தொழிலாளர் சட்டங்களைப் பயிலும் மையமாக உருவாக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது.

இச்சந்திப்பின் போது சிஐடியு மாநில நிர்வாகிகள் மாலதி சிட்டிபாபு, கே.திருச்செல்வன், இ.முத்துக்குமார், ஏ.கிருஷ்ணமூர்த்தி, கே.சி.கோபிக்குமார் ஆகியோர் உடனிருந்தனர். முதலமைச்சருடனான சந்திப்பிற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அ.சவுந்தரராசன், “தமிழக தொழிலாளி வர்க்கத்தின் மிக முக்கியமான கோரிக்கைகளை முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் முழுமையாகக் கேட்டறிந்தார். மனுவில் உள்ள அம்சங்களைப் பரிசீலித்து, உரிய முறையில் நிறைவேற்றுவதாக உறுதியளித்துள்ளார்” என்று தெரிவித்தார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.