தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

திமுக ஆட்சியில் 25 லட்சம் பேருக்கு பட்டா! துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்!

13 Mar 2026, 4:52 pm
திமுக ஆட்சியில் 25 லட்சம் பேருக்கு பட்டா!  துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்!
<p><strong>திமுக ஆட்சியில் 25 லட்சம் பேருக்கு பட்டா! &nbsp;துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்!</strong></p> <p>கள்ளக்குறிச்சி,மார்ச்13- கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற அரசு விழா வில், ரூ.34 கோடி மதிப்பி லான 758 புதிய திட்டப்பணி களைத் திறந்து வைத்து, 24,910 பயனாளிகளுக்கு ரூ.116.24 கோடி மதிப்பி லான நலத்திட்ட உதவி களைத் துணை முதல மைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். &nbsp;விழாவில் அவர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு: மகளிர் நலத்திட்டங்கள் தமிழ்நாடு இன்று &lsquo;மகளிர் நாடு&rsquo; என்று அழைக்கப்படும் அள விற்குப் பெண்கள் முன்னேற் &nbsp;றம் அடைந்துள்ளனர். திமுக அரசு பொறுப்பேற்றதும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கையெழுத்திட்ட &lsquo;விடியல் பயணத் திட்டம்&rsquo; மூலம் இதுவரை 920 கோடி பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கள்ளக்குறிச்சி மாவட்ட த்தில் மட்டும் 12 கோடி பயணங்கள் பதிவாகி யுள்ளன. &nbsp;&lsquo;கலைஞர் மகளிர் உரிமைத் தொகை&rsquo; திட்டத்தின் கீழ் 1.32 கோடி பெண்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது. வரும் தேர்த லில் திமுக அரசு மீண்டும் வெற்றி பெற்று, &lsquo;திராவிட மாடல் 2.0&rsquo; அமையும் போது, இந்தத் தொகை ரூ.2,000 ஆக உயர்த்தப் படும் என்று அவர் உறுதி அளித்தார். கல்வி மற்றும் வேலைவாய்ப்பு மாணவர்களுக்காகக் காலை உணவுத் திட்டம், புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப்புதல்வன் கல்வி ஊக்கத்தொகைத் திட்டங்கள் சிறப்பாகச் செயல்படுத்தப்படுகின்றன. கள்ளக்குறிச்சி மாவட் டத்தில் 47,000 குழந்தைகள் காலை உணவுத் திட்டத்தா லும், 27,000 மாணவர் &nbsp; &nbsp;கள் கல்வி ஊக்கத் தொகை யாலும் பயனடைந்துள்ள னர். &lsquo;நான் முதல்வன்&rsquo; திட்டத்தின் கீழ் 49 லட்சம் பேருக்குத் திறன் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. உளுந்தூர்பேட்டையில் அமைக்கப்பட்டுள்ள சிப்காட் பூங்கா மூலம் 2,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. உள்கட்டமைப்பு மற்றும் வீட்டுவசதி &nbsp;கடந்த ஐந்தாண்டு கால திமுக ஆட்சியில் இதுவரை 25 லட்சம் பேருக்கு வீட்டு மனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மட்டும் 41,000 பேருக்குப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், &lsquo;கலைஞர் கனவு இல்லம்&rsquo; திட்டத்தின் கீழ் கடந்த 5 ஆண்டுகளில் 3 லட்சம் வீடுகள் கட்டப் பட்டுள்ளன. அடுத்த 4 ஆண்டுகளில் 8 லட்சம் வீடுகள் கட்டித் தரப்படும் என அவர் தெரிவித்தார். பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலன் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த &lsquo;தொல்குடி&rsquo; திட்டத்தின் கீழ் ரூ.1,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு எனத் தனித் துறையை உருவாக்கி, இந்தியா விலேயே முதன்முறையாக உள்ளாட்சி அமைப்புகளில் அவர்களை நியமித்து திமுக அரசு அதிகார மளித்துள்ளது. இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் எம்.எஸ். பிரசாந்த் தலைமையில் நடைபெற்ற விழாவில் அமைச்சர் எ.வ,வேலு, நாடாளுமன்ற உறுப்பினர் தே.மலையரசன், சட்ட மன்ற உறுப்பினர்கள் உதய சூரியன், வசந்தம் கார்த்தி கேயன்,ஏ.ஜெ. மணிக் &nbsp;கண்ணன், கள்ளக்குறிச்சி ஒன்றியக்குழு தலைவர் அலமேலு ஆறுமுகம், துணைத்தலைவர் விமலா முருகன், சின்ன சேலம்ஓன்றிய குழு பெருந்தலைவர் மா. சத்திய மூர்த்தி, துணைத்தலைவர் வி.வி.அன்புமணிமாறன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் இரா.புவ னேஸ்வரி பெருமாள், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கி.ரமேஷ்குமார் மற்றும் அரசு &nbsp;உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.