தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வாய்ப்பு வாசல்

10 Dec 2025, 4:08 pm
வாய்ப்பு வாசல்

மத்திய காவல்துறையில் 25,487 பணியிடங்கள்

மத்திய ஆயுதக் காவல்துறையில்(முன்பு துணை ராணுவப் படைகள் என்று அழைக்கப்பட்டது) கான்ஸ்டபிள் பணிகளுக்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான காலிப்பணியிடங்கள் மொத்தம் 25,487 ஆகும். இதற்கான விண்ணப்பம் வெளியாகி உள்ளது. கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் கூடுதல் தகுதியாக NCC பயிற்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு – ஜனவரி  1, 2026 அன்று குறைந்தபட்சம் 18  முதல் அதிகபட்சமாக 23 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்சி/எஸ்டி பிரிவினர்களுக்கு 5 வருடங்கள் மற்றும் ஓபிசி பிரிவினர்களுக்கு 3 வருடங்கள் என்று உச்சபட்ச வயதுவரம்பில் சலுகைகள் வழங்கப்படும். தேர்வு முறை: கான்ஸ்டபிள் பணிகளுக்கான தேர்வு மூன்று கட்டங்களாக நடத்தப்படும். இது எழுத்து தேர்வு, நேர்முகத் தேர்வு, உடல் தகுதி திறன் தேர்வு மற்றும் மருத்துவ உடற்தகுதி  ஆகியவை ஆகும். இவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். இத்தேர்வானது SSC-ஆல் ஆன்லைனில் நடத்தப்படும். எழுத்து தேர்வு நடைபெறும் இடம் தேதி பற்றிய முழு விவரம் மின்னஞ்சல் மூலம் விண்ணப்பதாரர்களுக்கு தெரிவிக்கப்படும். விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினர்களுக்கு ரூ.100 செலுத்தி ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம். எஸ்சி / எஸ்டி , பெண்கள் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை. இந்தப் பணியிட நிரப்புதல் குறித்த பாடவாரியான காலியிடங்களின் எண்ணிக்கை, தேர்விற்கான விண்ணப்பம், விரிவான பாடத்திட்டம், மதிப்பெண் விபரம் உள்ளிட்ட கூடுதல் விபரங்கள் அறிவிக்கையில் முழுமையாகத் தரப்பட்டுள்ளன. முழுமையான அறிவிக்கையைப் பெற www.ssc.gov.in என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம். விண்ணப்பங்களை நிரப்புவதற்கான கடைசித்தேதி டிசம்பர் 31, 2025 ஆகும்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்  2026 ஆம் ஆண்டிற்கான  தேர்வு அட்டவணை

SBI - வங்கியில் காலிப்பணியிடங்கள் 996

பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பாரத ஸ்டேட் வங்கியில்(எஸ்.பி.ஐ) ஸ்பெஷலிஸ்ட் ஆபிஸர்  பணிகளுக்கு 996 தகுதியான வர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான விண்ணப்பம் வெளியாகி உள்ளது. கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு துறையில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் வங்கிநிதி விற்பனைப் பிரிவில்(Banking Finance Marketing) முதுநிலை மேலாண்மைப் பட்டம்(MBA) படித்து வங்கி அல்லது நிதி நிறுவனங்களில் குறைந்தபட்சமாக 1 முதல் 6 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு: Customer Relationship Executive பணிக்கு குறைந்தபட்சமாக 20 முதல் அதிகபட்சமாக 35 வயதுக்குள் இருக்க வேண்டும். துணைத்தலைவர் மற்றும் உதவித் துணைத்தலைவர் (VP & AVP) பணிக்கு குறைந்தபட்சமாக 23 முதல் அதிகபட்சமாக 42 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். தேர்வு முறை: ஆன்லைன் மூலம் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிகளுக்கு  தேர்வு செய்யப்படுவர். இது பற்றிய முழு விவரம் தகுதியான வர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும். விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி /எஸ்டி, ஓபிசி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது. மற்ற பிரிவினர்களுக்கு ரூ.750 செலுத்தி ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இந்தப் பணியிட நிரப்புதல் குறித்த பாடவாரியான காலியிடங்களின் எண்ணிக்கை, தேர்விற்கான விண்ணப்பம், விரிவான பாடத்திட்டம், மதிப்பெண் விபரம் உள்ளிட்ட கூடுதல் விபரங்கள் அறிவிக்கையில் முழுமையாகத் தரப்பட்டுள்ளன. முழுமையான அறிவிக்கையைப் பெற மற்றும் விண்ணப்பிக்க https://sbi.bank.in/web/careers/current-openings என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம். விண்ணப்பங்களை நிரப்புவதற்கான கடைசித்தேதி டிசம்பர் 23, 2025 ஆகும்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.