தோழர் ஆர்.வெங்கிடு-வின் 24 ஆவது நினைவேந்தல்
8 Mar 2026, 3:42 pm
<p><strong>தோழர் ஆர்.வெங்கிடு-வின் 24 ஆவது நினைவேந்தல்</strong></p>
<p>கோவை, மார்ச் 8- சிபிஎம் மூத்த தோழர் ஆர்.வெங்கிடு அவர்களின் 24 ஆவது நினைவேந்தல் சனியன்று அனுசரிக்கப் பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட முன்னாள் செயலா ளரும், சட்டமன்ற முன் னாள் உறுப்பினருமான ஆர்.வெங்கிடு அவர்களின் 24 ஆவது ஆண்டு நினைவு தின பொதுக்கூட்டம் சனியன்று சின்னவேடம் பட்டி பாரதி வீதியில் நடைபெற்றது. முன்ன தாக ஒன்றியச் செயலாளர் எம்.சண்முக சுந்தரம் தலைமையில் தோழர் ஆர்.வெங்கிடு நினைவிடத்திற்கு பேரணியாக சென்றனர். அங்கு சிபிஎம் மூத்த தலைவரும், சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான யு.கே.வெள்ளியங்கிரி கட்சி கொடியை ஏற்றி வைத் தார். பொதுக்கூட்டத்திற்கு ஒன்றியக்குழு உறுப்பினர் வி.பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தார். சிபிஎம் மாநில செயற் குழு உறுப்பினர் மதுக்கூர் இராமலிங்கம் சிறப்புரையாற்றினார். இதில் மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, வி.இராமமூர்த்தி, ஆர்.கோபால், எஸ்.எஸ். குளம் மேற்கு கமிட்டி செயலாளர் எம்.சண் முகசுந்தரம், மாவட்டக்குழு உறுப்பினர் ஜெ. உஷா உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர். முடிவில், ஒன்றியக்குழு உறுப்பினர் எஸ்.ரமேஷ் நன்றி கூறினார்.</p>
