தியாகி தோழர் இடுவாய் ரத்தினசாமி 24 ஆவது ஆண்டு நினைவு தினம்
13 Mar 2026, 4:52 pm
<p><strong>தியாகி தோழர் இடுவாய் ரத்தினசாமி 24 ஆவது ஆண்டு நினைவு தினம்</strong></p>
<p>திருப்பூர், மார்ச் 13- சாதி, மத ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடி, களப்பலி யான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தியாகி தோழர் இடு வாய் ரத்தினசாமி யின் நினைவு தினம் வெள்ளியன்று அனுச ரிக்கப்பட்டது. சாதி வெறியர்களால் படுகொலை செய்யப்பட்ட இடுவாய் தியாகி தோழர் கே.ரத்தினசாமி யின் 24 ஆவது ஆண்டு நினைவு தினம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு அலு வலகத்தில் வெள்ளியன்று கடைபிடிக்கப்பட்டது. இந்நிகழ் வில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் கே.காமராஜ், மாவட்டச் செயலாளர் சி.மூர்த்தி உட்பட கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.</p>
