தீக்கதிர் முக்கிய செய்திகள்
17 Nov 2025, 3:10 pm

மேல்முறையீடு ஒத்திவைப்பு

சென்னை: துணை வேந்தர்கள் நியமன மசோதா தொடர்பான தமிழ் நாடு அரசின் மேல்முறை யீட்டு மனுவை உச்சநீதி மன்றம் டிசம்பர் 2-க்கு ஒத்திவைத்துள்ளது. தமிழ் நாட்டில் உள்ள 21 பல்கலைக் கழகங்கள் தலைவர் இல்லாமல் செயல்பட்டு வருவதால் மேல்முறை யீட்டு வழக்கை விரைந்து விசாரணைக்கு எடுக்க வேண் டும் என்றும், பல்கலைக் கழக துணைவேந்தர் நிய மன மசோதாவை எதிர்த்த வழக்கில் உயர் நீதிமன்றம் விதித்த இடைக்கால தடையை நீக்க வேண்டும் என்றும், தமிழ்நாடு அர சின் வாதங்களைக் கேட்கா மலேயே, உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து ள்ளது என்றும் தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

மக்களைத் தேடி மருத்துவம் திட்டம்: 2.50 கோடி பயனாளர்களை எட்டியது

சென்னை: தமிழக அரசின் மக்களைத் தேடி மருத்து வம் திட்டம் நான்கு ஆண்டுகளில் 2.50 கோடி மக்களின் நலம் காத்து சாதனை படைத்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 5, 2021 அன்று கிருஷ்ணகிரி மாவட்டம், சாமனப்பள்ளி கிராமத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இத்திட்டத்தைத் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின்கீழ், 45 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு அவர்களின் வீடுகளுக்கே சென்று உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும் பிற நோய்களுக்கான மருந்துகள் வழங்கப்படு கின்றன. நோய் ஆதரவு சேவைகள், இயன்முறை மருத்துவ சேவைகள் மற்றும் சிறுநீரக நோயாளிகளுக்கு டையா லிசிஸ் பைகள் வழங்கும் பணிகளும் மேற்கொள்ளப் படுகின்றன. பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட வாகனங் களில் இயன்முறை பணியாளர் மற்றும் நோய் ஆதரவு செவிலியர் அடங்கிய குழு தமிழ்நாடு முழுவதும் சேவை களை வழங்கி வருகிறது. இத்திட்டத்தின் 2 கோடியே 50 லட்சமாவது பயனாளி யான தஞ்சை மாவட்டம், தென்னங்குடியைச் சேர்ந்த மனோன்மணிக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் மருந்துப் பெட்டகத்தை வழங்கினார். தொற்றா நோய்களின் கட்டுப் பாட்டில், சாதனை படைத்து ஐ.நா. விருது வென்ற இத்திட்டத்தை பாராட்டி முதலமைச்சர் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கட்டடம், மனை விற்பனை ஒழுங்குமுறை குழுமத்திற்கு புதிய கட்டடம்

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை சார்பில், கட்டடம் மற்றும் மனை விற்பனை ஒழுங்குமுறை குழுமம் மற்றும் மேல்முறையீட்டு தீர்ப்பா யத்திற்கு சென்னை அண்ணா நகரில் 97 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய அலுவலகக் கட்டடத்தினை காணொலி வாயிலாக திறந்து வைத்தார். தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால், சென்னை அண்ணாநகர் பகுதியில் 19,008 சதுர அடி கொண்ட இடத்தில், 77.60 கோடி ரூபாய் செலவில், 56,000 சதுர அடியில் கட்டப்பட்ட கட்டடம் இக்குழுமத்தால் வாங்கப்பட்டது. மேலும், 19.49 கோடி ரூபாய் செலவில் இக்கட்டடத்தின் உட்கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. இக்கட்டடம், பொது மக்களுக்கான தகவல் மையம், வாகனம் நிறுத்து மிடம், வரவேற்பறை, காத்திருப்பு அறை, மின்தூக்கி வசதி, நவீன குளிர்சாதன வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளு டன் அமைக்கப்பட்டுள்ளன.

மின்வாரியம், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளிடம் சிபிஐ விசாரணை

கரூர்: கரூர் வேலுச்சாமிபுரத்தில் செப்டம்பர் 27ஆம் தேதி நடைபெற்ற தவெக பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். 110 பேர் காயமடைந்த னர். இந்த சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தர வின்படி சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்ற னர். திங்களன்று கரூர் மாவட்டம் க.பரமத்தி பகுதியில் உள்ள பவர் கிரீட் நிறுவனத்தில் பணியாற்றும் மின்வாரியத் துறை அதிகாரிகள் இருவர் மற்றும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் 5 பேரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

முதலமைச்சர், திரைக் கலைஞர்கள் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை, நவ.17- தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வீடு, நடிகர் அஜித் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் வீடு மற்றும் அரசு அலுவல கங்கள் உள்ளிட்ட இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. டிஜிபி அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப் பட்ட மிரட்டல் கடிதத்தில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி, நடிகர்கள் அஜித், அரவிந்த் சாமி, கங்கை அமரன், லிவிங்ஸ்டன், எஸ்பிபி சரண், திண்டுக்கல் லியோனி, இயக்கு நர் ஏ.ஆர் முருகதாஸ், செஸ் வீரர் பிரக்யானந்தா, குஷ்பு சுந்தர், ஜெயரஞ்சன் ஆகியோரின் வீடுகள் மற்றும் அம லாக்கத் துறையில் உள்ள சி.ஆர்.பி.எஃப். அலுவலகம் ஆகிய இடங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட ப் பட்டிருந்தது. குறிப்பிடப்ப ட்ட இடங்களில் காவல்துறையினர் சோதனை மேற்கொண்ட நிலையில், இது புரளி என்பது தெரிய வந்தது.

வேலை நிறுத்தம் செய்தால் சம்பளம் இல்லையாம்!

சென்னை: பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட கோரிக்கை களை முன்வைத்து ஜாக்டோ-ஜியோ கூட்ட மைப்பு நவம்பர் 18 அன்று நடத்த திட்ட மிட்டுள்ள அடையாள வேலை நிறுத்தத்தை யொட்டி, அரசு மிரட்டல் விடுத்துள்ளது. வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்வோருக்கு சம்ப ளம் வழங்கப்படாது என தலைமைச் செயலாளர் முருகானந்தம் தெரி வித்துள்ளார். தற்செயல் விடுப்பு எடுப்பதற்கும் அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.

நவ. 22-இல் உருவாகும் புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி!

சென்னை: வங்கக் கடலில் நவம்பர் 22 அன்று புதிய காற்ற ழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ள தாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரி வித்துள்ளது. இதனால், கடலோர மாவட்டங்களி லும், டெல்டா மாவட் டங்களிலும் நவம்பர் 21, 22-இல் மிக கன மழைக்கு வாய்ப்புள்ள தாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. நவம்பர் 15 அன்று இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தற்போது அதே பகுதிகளில் தொடர்ந்து நிலவதால், தூத்துக்குடி, நாகை, காரைக்கால் மீனவர்கள் கடலுக்குச் செல்லத் தடை விதிக்கப் பட்டுள்ளது.

சபரிமலை பக்தர்களுக்காக 24 மணிநேர தகவல் மையங்கள்

சென்னை: சபரி மலைக்குச் செல்லும் தமிழ்நாடு அய்யப்ப பக்தர்களுக்கு உதவும் வகையில் சென்னை ஆணையர் அலுவலகம், களியக்காவிளை மற்றும் சபரிமலையில் 24 மணி நேரமும் இயங்கும் தக வல் மையங்கள் அமைக்கப்ப ட்டுள்ள தாக இந்து சமய அற நிலையத்துறை அமைச் சர் பி.கே‌. சேகர்பாபு அறி வித்துள்ளார். இத்தக வல் மையங்கள் ஜன வரி 20, 2026 வரை செயல் படும். சென்னை தகவல் மையத்தை 1800 425 1757 என்ற கட்டணமில்லா எண்ணிலும், பிற மையங் களை குறிப்பிட்ட கை பேசி எண்கள் மூலமாக வும் தொடர்பு கொள்ள லாம்.