முந்தய பக்கம்

கல்லூரி பேராசிரியர்களுக்கான 24 மணி நேர ஹேக்கத்தான்

30 Oct 2026, 11:55 pm
கல்லூரி பேராசிரியர்களுக்கான 24 மணி நேர ஹேக்கத்தான்

கல்லூரி பேராசிரியர்களுக்கான 24 மணி நேர ஹேக்கத்தான்

கோவை, அக். 30 -தொழில்துறை சார்ந்த நடைமுறை சிக்கல்களுக்கு புதுமையான தொழில்நுட்ப தீர்வுகளை காணும் நோக்கில், கல்லூரி பேராசிரியர்களுக்கான 24 மணி நேர ‘மென்டர்எக்ஸ்’ ஹேக்கத்தான் போட்டி கோவை அவிநாசி சாலையில் உள்ள கே.பி.ஆர் பொறியியல் கல்லூரியில் வெள்ளியன்றுதொடங்கியது.

தொழில் நிறுவன கூட்டமைப்பு பிரிவு சார்பில் அக்.30, 31 ஆகிய இரு தேதிகளில் 24 மணி நேரமும் தொடர்ச்சியாக நடைபெறும் இப்போட்டியில், பல்வேறு பொறியியல் துறைகளை சேர்ந்த பேராசிரியர்கள் குழுக்களாக பங்கேற்றுள்ளனர். இவர்கள்தொழில்துறையில் தற்காலத்தில் நிலவும் சவால்களை ஆராய்ந்து அதற்கான நவீன தீர்வுகளை வடிவமைத்து வருகின்றனர். முன்னதாக நடைபெற்ற தொடக்க விழாவில், டாடா ஆட்டோ காம்போனென்ட்ஸ்சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் வெப்பமேலாண்மைப்பிரிவு தலைவர் டாக்டர் சி.எஸ்.ராஜாமாணிக்கம் சிறப்பு விருந்தினராக பங்கேற்று நிகழ்வை தொடங்கி வைத்தார்.

பல்வேறு முன்னணி தொழில் நிறுவனங்களை சேர்ந்த துறைசார் வல்லுநர்கள் நடுவர்களாக கலந்துகொண்டு பேராசிரியர்களின் படைப்புகளை மதிப்பீடு செய்து வருகின்றனர். போட்டிகளின் முடிவில் நடைபெறவுள்ள நிறைவு விழாவில், இந்தோஷெல் காஸ்ட் நிறுவன இணை துணைத் தலைவரும்இயக்குநருமான டாக்டர் வி.எஸ். சரவணன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பரிசுகளை வழங்கவுள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram