முந்தய பக்கம்

விழிஞ்ஞம் துறைமுக விரிவாக்கத்துக்காக 230 ஏக்கர் நிலம்

14 Mar 2026, 2:57 pm
விழிஞ்ஞம் துறைமுக விரிவாக்கத்துக்காக 230 ஏக்கர் நிலம்
<p><strong>விழிஞ்ஞம் துறைமுக விரிவாக்கத்துக்காக 230 ஏக்கர் நிலம்</strong></p> <p>திருவனந்தபுரம், மார்ச் 14- விழிஞ்ஞம் சர்வதேச துறைமுகத் தின் விரிவாக்க நடவடிக்கைகளுக்காக 230 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த கேரள அமைச்சரவை முடிவு செய்துள் ளது. அதே போல நிலம் கையகப் படுத்தல் (LARR) சட்டத்தின்படி, கோட்டுக்கல், மாரநல்லூர் மற்றும் அமரவிளா பகுதிகளில் சுமார் ரூ. 810 கோடி செலவில் நிலம் கையகப் படுத்தப்படும். நிலத்தை கையகப்படுத் துவதற்குத் தேவையான தொகை யில் ரூ. 283.68 கோடியை நிறுவனத் தின் கணக்கிலிருந்து பயன்படுத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள் ளது. மீதமுள்ள தொகை தற்போது அங்கீகரிக்கப்பட்ட நபார்டு கடனில் இருந்து பெறப்படும். கையகப் படுத்தப்பட உள்ள 230 ஏக்கர் நிலத்தில் துறைமுகம் சார்ந்த தொழில்மய மாக்கல் தொடர்பான அனைத்து நடவ டிக்கைகளையும் மேற்கொள்ள விழிஞ்ஞம் சர்வதேச துறைமுக நிறு வனம் (VISL) அனுமதி வழங்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது. &nbsp;தெருவோர குழந்தைகள் பாதுகாப்பு கொள்கை குறிப்பாக தெருவோரக் குழந்தை களின் பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வுக் கான மாநிலக் கொள்கையை வகுக்க &nbsp;முடிவு செய்யப்பட்டுள்ளது. தெருவோ ரக் குழந்தைகளின் பாதுகாப்பு தொ டர்பாக 2022 ஜனவரி 17 அன்று உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப் படையில், தெருவோரக் குழந்தைக ளின் பாதுகாப்பு, மறுவாழ்வு மற்றும் ஆரோக்கியத்தை உறுதி செய்வதற் கும் அவர்களுக்கு அடையாள ஆவ ணங்களை வழங்குவதற்கும் ஒரு விரி வான கட்டமைப்பை அமைச்சரவை அங்கீகரித்துள்ளது. வயநாடு நிலச் சரிவில் பாதிக்கப்பட்டோரின் வீடுக ளுக்குத் தேவையான பொருட்கள் வாங்க தலா ஒரு லட்சம் ரூபாய் முதல்வரின் நிவாரண நிதியில் இருந்து வழங்கவும் கேரள அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டுள்ளது.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram