தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

22 ஆவது திருப்பூர் புத்தகத் திருவிழா ஜன.22 - பிப்.1 வரை சிறப்பாக நடத்த திட்டம்

26 Nov 2025, 4:29 pm
22 ஆவது திருப்பூர் புத்தகத் திருவிழா ஜன.22 - பிப்.1 வரை சிறப்பாக நடத்த திட்டம்
<p><strong>22 ஆவது திருப்பூர் புத்தகத் திருவிழா ஜன.22 - பிப்.1 வரை சிறப்பாக நடத்த திட்டம்</strong></p> <p>திருப்பூர், நவ.26 - தமிழ்நாடு அரசு, திருப் பூர் மாவட்ட நிர்வாகம், திருப் பூர் பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 22 ஆவது திருப்பூர் புத்தகத் திரு விழாவை வரும் 2026ஆம் ஆண்டு ஜனவரி 22ஆம் தேதி முதல் பிப்ரவரி 1 ஆம் &nbsp;தேதி முடிய 11 நாட்கள் சிறப் பாக நடத்துவது என்று புத் தகத் திருவிழா வரவேற்புக் குழு ஆலோசனைக் கூட்டத் தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. திருப்பூர் கேஆர்சி சிட்டி சென்டரில் செவ் வாயன்று மாலை புத்தகத் திருவிழா வரவேற் புக்குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற் றது. இக்கூட்டத்திற்கு அரிமா மு.ஜீவானந் தம் தலைமை வகித்தார். இதில் திருப்பூர் மக்க ளின் ஏகோபித்த ஆதரவுடன், ஆண்டுதோ றும் சிறப்பாக நடத்தப்பட்டு வரும் திருப்பூர் &nbsp;புத்தகத் திருவிழாவை 22ஆவது ஆண்டாக வரும் ஜனவரி 22ஆம் தேதி முதல் பிப்ரவரி 1 ஆம் தேதி முடிய 11 நாட்கள் நடத்துவது என்று &nbsp;தீர்மானிக்கப்பட்டது. காங்கேயம் சாலை வேலன் ஹோட்டல் மைதானத்தில் இந்த &nbsp;புத்தகத் திருவிழாவை சிறப்பாக நடத்துவ தற்காக, மேற்கொள்ள வேண்டிய பணிகள், &nbsp;ஏற்பாடுகள் குறித்து பின்னல் புக் டிரஸ்ட் சார்பில் ஆ.ஈஸ்வரன், அ.நிசார் அகமது மற் றும் வி.ராமமூர்த்தி ஆகியோர் விளக்கிப் பேசி னர். &nbsp;இந்த நிகழ்வில் பிரஸ் குமாரசாமி உள்பட &nbsp;புத்தகத் திருவிழா ஆர்வலர்கள், இளை ஞர்கள் திரளானோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனைக் கூட்டத் தின் முடிவில் பொறியாளர் சௌ.ஸ்டாலின் பாரதி நன்றி கூறினார்.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.