தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

22ஆவது திருப்பூர் புத்தகத் திருவிழா ஜன.24இல் தொடங்குகிறது

21 Jan 2026, 3:58 pm
22ஆவது திருப்பூர் புத்தகத் திருவிழா ஜன.24இல் தொடங்குகிறது
<p><strong>22ஆவது திருப்பூர் புத்தகத் திருவிழா ஜன.24இல் தொடங்குகிறது</strong></p> <p>திருப்பூர், ஜன. 21 &ndash; தமிழ்நாடு அரசு, திருப்பூர் மாவட்ட நிர்வா கம், பொது நூலகத்துறையுடன் இணைந்து திருப்பூர் பின்னல் புக் டிரஸ்ட் நடத்தும் 22 ஆவது திருப்பூர் புத்தகத் திருவிழா சனியன்று &nbsp;தொடங்குகிறது. திருப்பூர் காங்கேயம் ரோடு வேலன் ஹோட்டல் மைதானத்தில் நடைபெறும் இந்த &nbsp;புத்தகத் திருவிழாவை சனியன்று காலை 11 &nbsp;மணிக்கு மாவட்ட ஆட்சியர் மனிஷ் நாரண வரே தலைமையில், மாநில அமைச்சர்கள் மு. பெ.சாமிநாதன், என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோர் திறந்து வைக்கின்றனர். விருந்து படைக்கும் புத்தகங்கள் இந்த கண்காட்சியில் சுமார் 140 அரங்கங் கள் அமைக்கப்படுகின்றன. தமிழகத்தின் முன்னணி புத்தகப் பதிப்பகங்கள், விற்பனை யாளர்கள் இதில் பங்கேற்கின்றனர். அண்மை யில் சென்னை புத்தகக் கண்காட்சி நடை பெற்று முடிந்திருக்கும் நிலையில், இந்த ஆண்டு புதிதாக வெளிவந்திருக்கும் புத்த கங்கள் உள்பட அறிவியல், இலக்கியம், வர லாறு, அரசியல், சுயமுன்னேற்றம் உள்பட பல்வேறு தலைப்புகளில் ஏராளமான புத்த கங்கள் வாசகர்களுக்கு விருந்து படைக்கக் காத்திருக்கின்றன. பிப்ரவரி 3ஆம் தேதி வரை 11 நாட்கள் &nbsp;நடைபெறும் இக்கண்காட்சியில் புத்தக அரங் குகளில், தினமும் காலை 11 மணிக்குத் தொடங்கி இரவு 9.30 மணி வரை பார்வை யாளர்கள் பார்வையிட்டு புத்தகங்கள் வாங்க லாம். &nbsp;செவிகளுக்கு விருந்து ஒவ்வொரு நாளும் மாலை கலை இலக்கி யச் சான்றோர்கள், அறிஞர்கள் பங்கேற்கும் &nbsp;சிந்தனை கருத்தரங்குகள் நடைபெறுகின் றன. ஜனவரி 24 அன்று மாலை விடுதலைப்போ ரில் கொங்கு நாட்டின் பங்கு எனும் தலைப்பில் &nbsp;எழுத்தாளர் அனிதா கிருஷ்ணமூர்த்தி, பேச் சுத்தமிழ் எனும் தலைப்பில் கவிஞர் மகுடேசு வரன் உரையாற்றுகின்றனர். ஜன.25 ஞாயி றன்று மாலை, ஆயிரம் கைகள் மறைத்து &nbsp;நின்றாலும்.. எனும் தலைப்பில் சிந்துவெளி &nbsp;ஆய்வு மையத்தின் மதிப்புறு ஆலோசகர் இரா.பாலகிருஷ்ணன், &nbsp;தமிழ் அறிவு வளாகம் &nbsp;ஏன்? எதற்கு? என்பது பற்றி ரோஜா முத்தையா &nbsp;ஆராய்ச்சி நூலகத்தின் சுந்தர்கணேஷ் ஆகி யோர் உரையாற்றுகின்றனர். இந்தியக் குடியரசு தினமான ஜனவரி 26 &nbsp;அன்று திருப்பூர் தமிழ்ச்சங்கத்தின் இலக்கிய &nbsp;விருது வழங்கும் விழா நடைபெறுகிறது. இதில் தமிழிசை அன்றும், இன்றும் &ndash; இசை யும், உரையும் எனும் தலைப்பில் முனைவர் &nbsp;கோ.ப.நல்லசிவம் கருத்துரை ஆற்றுகிறார். மாணவர்களுக்கு பரிசளிப்பு ஜன.27 அன்று மாலை, புத்தகத் திருவிழா வை முன்னிட்டு மாணவ, மாணவிகளுக்கு நடத்தப்பட்ட கலை இலக்கியத் திறனாய்வு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசு வழங்கும் விழா நடைபெறுகிறது. இதில் &nbsp;மாநகராட்சி ஆணையர் எம்.பி.அமித், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் யாதவ் &nbsp;கிரிஷ் அசோக், திருப்பூர் மாநகர காவல் துணை ஆணையர் மு.இராசராசன் ஆகி யோர் பங்கேற்று மாணாக்கர்களுக்குப் பரிச ளித்து வாழ்த்துரை ஆற்றுகின்றனர். ஜன.28 அன்று இயற்கை வளர்ச்சிக்கு இனிக்கும் வள்ளுவம் எனும் தலைப்பில் அகில இந்திய வானொலி முன்னாள் நிகழ்ச்சி &nbsp;இயக்குநர் பேராசிரியர் சுந்தர ஆவுடையப் பன், பூவுலகே புத்தகங்கள்தான் எனும் &nbsp;தலைப்பில் சூழலியல் அறிஞர் கோவை &nbsp;ஓசை காளிதாஸ் ஆகியோர் உரையாற்று கின்றனர். ஜன.29 வியாழனன்று வெல்வ தற்கே வாழ்க்கை எனும் தலைப்பில் சிந்த னைக் கவிஞர் கவிதாசன், பறவைகளோடு பேசுவோம் எனும் தலைப்பில் சூழலியல் அறி ஞர் கோவை சதாசிவம் ஆகியோர் உரையாற் றுகின்றனர். ஜன.30 வெள்ளியன்று கதையும் &ndash; கவிதை யும் எனும் தலைப்பில் கவிதா ஜவஹர், எட்டுத் &nbsp;திசைக் காற்று எனும் தலைப்பில் பேராசிரி யர் மணிவண்ணன் ஆகியோர் கருத்துரை ஆற்றுகின்றனர். ஜன.31 சனியன்று அறம் &nbsp;சூழ் உலகு எனும் தலைப்பில் புதிய தலை முறை தொலைக்காட்சி ஆசிரியர் இரா.விஜ யன், உலக சினிமா எனும் தலைப்பில் நாவலா சிரியர் சுப்ரபாரதிமணியன் ஆகியோர் உரை யாற்றுகின்றனர். பட்டிமன்றம் பிப்ரவரி 1ஆம் தேதி ஞாயிறன்று பட்டிமன் றம் நடைபெறுகிறது. இன்றைய சூழலில் சமூ கப்பற்று வளர்கிறதா? தளர்கிறதா? எனும் &nbsp;தலைப்பில் பேராசிரியர் சிவகாசி இராமச்சந் திரன் நடுவராக பங்கேற்கும் பட்டிமன்றம் நடைபெறுகிறது. பிப்.2 திங்களன்று திரைப் பட பாடலாசிரியர் கவிஞர் யுகபாரதி இலக்கி யமும் &ndash; திரைப்படப் பாடல்களும் எனும் தலைப்பில் கருத்துரை ஆற்றுகிறார். புத்தகத் திருவிழாவின் நிறைவு நாளான &nbsp;பிப்.3 செவ்வாயன்று திரைப்பட இயக்குநர் பாரதி கிருஷ்ணகுமார் பங்கேற்று நூலும் &ndash; நூல்களும் எனும் தலைப்பில் கருத்துரை ஆற்றுகிறார். சிற்றுண்டி, வாகன நிறுத்தம் இத்துடன் காலை நேரம் மாணவர்க ளுக்கு அறிவியல் கருத்துரை நிகழ்வுகளும் &nbsp;நடைபெறும். அரசு நிர்வாகத்தின் அரங்கு கள், சிற்றுண்டி கடைகள், வாகன நிறுத்தம் &nbsp;என இந்த விழாவின் அனைத்து ஏற்பாடுகளை யும் மாவட்ட நிர்வாகம், பின்னல் புக் டிரஸ்ட் அமைப்பினர் இணைந்து தீவிரமாகப் பணி களை மேற்கொண்டுள்ளனர். &nbsp;ஆண்டுதோறும் ஒரு லட்சம் பேர் புத்தகத் &nbsp;திருவிழாவை பார்வையிட்டு செல்வர். ரூ.1 &nbsp;கோடிக்கு மேலான புத்தகங்கள் விற்பனை யாகும். அதேபோல் இந்த ஆண்டும் திருப்பூர் &nbsp;மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் இந்த &nbsp;பண்பாட்டுத் திருவிழா மிகச் சிறப்பான வெற்றி பெறும் என்று புத்தகத் திருவிழா ஏற் பாட்டாளர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.