சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை வாலிபருக்கு 22 ஆண்டுகள் சிறை
8 Apr 2026, 5:30 am

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை வாலிபருக்கு 22 ஆண்டுகள் சிறை

விழுப்புரம், ஏப். 7- சிறுமிக்குப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், வாலிபர் ஒருவருக்கு 22 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து விழுப்புரம் போக்சோ (POCSO) நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பளித்துள்ளது.

விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் அருகே உள்ள திருச்சிற்றம்பலம் கூட்டுரோடு பகுதியைச் சேர்ந்த மோகன் (என்கிற) குமரேசன் (24). கடந்த 2019-ஆம் ஆண்டு ஒன்பது வகுப்பு படித்துக் கொண்டிருந்த 14 வயது சிறுமியை ஆசைவார்த்தை கூறி கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இது குறித்து புகாரின் பேரில், ஆரோவில் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து குமரேசனைக் கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை விழுப்புரம் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி வி.ரோஜா, குற்றம் சாட்டப்பட்ட குமரேசனுக்கு 22 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துத் தீர்ப்பளித்தார்.