தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வாய்ப்பு வாசல்

6 Feb 2026, 5:40 pm
                  வாய்ப்பு வாசல்
<p><strong>ரயில்வேயில் 22,195 பணியிடங்கள்&nbsp;</strong></p> <p>அரசு நிறுவனங்களில் அதிக எண்ணிக்கையிலான ஊழியர்களைக் கொண்டுள்ள இந்திய ரயில்வே 22 ஆயிரத்து 195 பணி யிடங்களை நிரப்பவிருக்கிறது. இதற்கான அறிவிக்கை(எண். 09/2025) &nbsp;வெளியாகியுள்ளது. &nbsp;விண்ணப்பங்களை நிரப்புவதற் &nbsp;கான பணி ஏற்கனவே தொடங்கிவிட் டது. ஜனவரி 31, 2026 முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப் பட்டிருந்தது. விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி மார்ச் 2, 2026 ஆகும். &nbsp;தொடக்க கட்டத்தில் ரூ.18,000 அடிப்படை ஊதியம் நிர்ணயிக்கப்படும் இந்தப் பணியிடத்திற்கான வயது வரம்பு 18 முதல் 33 வரையில் உள்ளது. இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி., எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்ச்சி அளிக்கப்படும். எந்தத் தேதிக்கு முன்பாகப் பிறந் திருக்கக்கூடாது என்ற விபரத்தையும் பிரிவுவாரியாக &nbsp;தந்திருக்கிறார்கள். பொது மற்றும் ஈ.டபிள்யூ.எஸ் &nbsp;&nbsp; &nbsp;&nbsp;&nbsp; &nbsp;&nbsp;&nbsp; &nbsp;&nbsp;&nbsp; &nbsp;&nbsp;&nbsp; &nbsp;-02.01.1993 இதர பிற்படுத்தப்பட்டோர் -02.01.1990 எஸ்.சி., எஸ்.டி., &nbsp;&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; - 02.01.1988 அனைத்துப் பிரிவுகளையும் சேர்ந்த &nbsp;தேர்வர்கள் 01.01.2008 ஆம் தேதிக்குப் பின்னர் பிறந்திருக்கக்கூடாது. விண்ணப்பிக்கும்போது மிகவும் கவனம் தேவை. புகைப்படத்தின் அளவு அறிவிக்கையில் உள்ளபடி இருந்தால் தான் அதை பதிவேற்றம் செய்ய இய லும். இதுபோன்ற பல அம்சங்களைக் கவனிக்க வேண்டும். &nbsp;தேர்வு முறை - எழுத்துத்தேர்வு, உடல்தகுதித் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் மருத்துவப் பரிசோத னை என்ற வரிசையில் தேர்வு முறை &nbsp;இருக்கும். &nbsp;எத்தனை கட்ட எழுத்துத் தேர்வு என்பது ரயில்வே பணியாளர் தேர்வு வாரியமே முடிவு செய்யும். எழுத்துத் தேர்வின்போது தவறான விடைகளுக்கு 1/3 மதிப்பெண்கள் கழித்துக் கொள்ளப்படும். கட்டணம் - 1. வரிசை எண்.2ல் குறிப்பிடப்படாத அனைவருக்கும் ரூ.500 கட்டணம். எழுத்துத் தேர்வில் கலந்து கொண் டால் ரூ.400 திருப்பித் தரப்படும். 2. எஸ்.சி., எஸ்.டி., முன்னாள் ராணு வத்தினர், மாற்றுத் திறனாளிகள், பெண்கள், திருநங்கைகள், சிறு பான்மையினர் ஆகியோருக்கு ரூ.250 கட்டணம். எழுத்துத் தேர்வில் கலந்து கொண்டால் இந்தக் கட்டணம் &nbsp;திருப்பித் தரப்படும். பாடத்திட்டம் உள்ளிட்ட கூடுதல் விபரங்களை https://www.rrbchennai.gov.in/ என்ற இணைய தளத்தில் இருந்து பெற்றுக்கொள்ளலாம். ரயில்வே தேர்வுகளுக்கான அட்டவணை 2026 ஆம் ஆண்டில் ஆயிரக்கணக் கான பணியிடங்களை ரயில்வே &nbsp;நிரப்பவுள்ளது. அதற்கான அட்டவ ணையை வெளியிட்டிருக்கிறார்கள். &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; பணியிடம் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; அறிவிக்கை நாள் 1. &nbsp;உதவி லோகோ பைலட் &nbsp;&nbsp; &nbsp;பிப்ரவரி 2026 2. தொழில்நுட்ப பணியாளர்கள் &nbsp;&nbsp;&nbsp; &nbsp;மார்ச் 2026 3. பிரிவுக் கட்டுப்பாட்டு அலுவலர் &nbsp;&nbsp;&nbsp; &nbsp;ஏப்ரல் 2028 4. இளநிலைப் பொறியாளர் &nbsp;&nbsp; &nbsp;ஜூலை 2026 5. துணை மருத்துவப் பணிகள் &nbsp;&nbsp; &nbsp;ஜூலை 2026 6. தொழில்நுட்பம் அல்லாத பணியிடங்கள் (பட்டப்படிப்பு மற்றும் அதற்கும் கீழே) &nbsp;&nbsp; &nbsp;ஆகஸ்டு 2026 7. டி பிரிவுப் பணிகள்&nbsp;&nbsp; &nbsp;அக்டோபர் 2026</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.