தீக்கதிர் முக்கிய செய்திகள்
3 Mar 2026, 3:38 pm

தமிழக அரசு தலையிட அரசு ஊழியர் சங்கம் கோரிக்கை

சென்னை: வருவாய்த்துறை சங்கங்களின் கூட்ட மைப்பு கடந்த 8 நாட்களாக பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலை யில், தமிழ்நாடு அரசு உடனடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இந்த சங்கத்தின் மாநிலத் தலைவர் மு.பாஸ்கரன் மற்றும் பொதுச் செயலாளர் வெ.சோமசுந்தரம் வெளியிட் டுள்ள அறிக்கையில், பணிப் பாதுகாப்புச் சட்டம் அமல்படுத்துதல், அனைத்து நிலை ஊழியர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்குதல், கிராம உதவி யாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், காலிப் பணியிடங்களை வெளிமுகமை மூலம் நிரப்புவதை கைவிடுதல், கருணை அடிப்படை யிலான பணியமர்த்தலின் அளவை உயர்த்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளும் இதில் இடம்பெற்றுள்ளன. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிர்வாகிகளை அரசு அழைத்துப் பேசி சுமூக தீர்வை எட்ட வேண்டும் என்றும், இதற்கு ஆதரவாக மார்ச் 4 ஆம் தேதி மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும் என்றும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் அறிவித்து உள்ளது.

பாஜகவை விமர்சிக்க தைரியம் இருக்கிறதா?: விஜய்க்கு கேள்வி

வேலூர்: திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாக கட்சியின் செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் தெரி வித்துள்ளார். வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத் தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் பொது மக்கள், தொழிலதிபர்கள், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களைச் சந்தித்து கருத்துகளை சேகரித்த பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசினார். விரை வில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒப்புதலுடன் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என்றும் கூறினார். மேலும், நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தது மக்கள் நலப் பணிகளுக்காக அல்ல, முதலமைச்சராகும் நோக்கத் திற்காக மட்டுமே என குற்றம்சாட்டிய அவர், பாஜக-வை திறந்தவெளியில் விமர்சிக்க விஜய்க்கு தைரியம் உள்ளதா என கேள்வி எழுப்பினார்.

நாங்குநேரி அருகே இரட்டைக் கொலையில் 7 பேர் கைது

திருநெல்வேலி, மார்ச் 3 - திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே களக்காடு ஏர்வாடி செல்லும் சாலையில் அமைந்துள்ள பெரும்பத்து கிரா மத்தில் வடமாநில தொழிலாளி உள்பட 2 பேர் வெட்டி படு கொலை செய்யப்பட்டனர். பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இச்சம்பவத்தில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாங்குநேரி அருகே பெரும்பத்து என்ற கிராமம் உள்ளது. இங்குள்ள டீக்கடையில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த திரினாத் கட்டா (50) என்பவர் திங்கட்கிழமை மாலை நின்று கொண்டிருந்தார். மேலும் சிலரும் நின்று பேசிக் கொண்டி ருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு 3 இருசக்கர வாக னங்களில் வந்த 7 பேர் கும்பல் பெட்ரோல் குண்டுகளை வீசி, ஆயுதங்களால் அங்கிருந்த 5 பேரை வெட்டினர். இதில் திரினாத் கட்டா மற்றும் ஜான் உள்பட 2 பேர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த மேலும் 4 பேர் மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டுள்ளனர். அதில் ஒருவரின் நிலைமை கவலைக் கிடமாக உள்ளது. சம்பவ இடத்திற்கு திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரசன்ன குமார், நாங்குநேரி துணை காவல் கண்காணிப்பாளர் தர்ஷிகா நடராஜன் மற்றும் காவல் அதிகாரிகள் வந்து விசாரணை நடத்தினர். கொலையாளிகளை கைது செய்யக்கோரி பெரும்பத்து ஊர் மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீ சார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதோடு நாங்குநேரி செல்லும் அனைத்து பாதைகளும் அடைக்கப் பட்டன. இதற்கிடையே இக்கொலைச் சம்பவத்தில் ஏழு பேர் செவ்வாயன்று மாலை கைது செய்யப்பட்டனர்.

துபாயில் தவித்த 217 பேர் சென்னை திரும்பினர்!

சென்னை, மார்ச் 3- துபாயிலிருந்து இந்தியா திரும்ப முடியாமல் தவித்த 217 பேர், எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் செவ்வாய்க் கிழமை சென்னை மீனம்பாக்கம் சர்வதேச விமான நிலையம் வந்தடைந்தனர். அமெரிக்கா - இஸ்ரேலின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக் கும் வகையில், துபாயிலுள்ள அமெரிக்க ராணுவத் தளம் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இதனால், பிப்ரவரி 28 முதல் துபாய், சவூதி அரேபியா, அபுதாபி, சார்ஜா, கத்தார், குவைத், மஸ்கட் போன்ற இடங்களிலிருந்து விமான சேவை கள் நிறுத்தப்பட்டன. இதனால், துபாயில் பணிபுரியும் ஏராளமான இந்தியர்கள் நாடு திரும்புவதில் கடுமையான சிக்கல்களை சந்தித்தனர். இந்நிலையில், மூன்று நாட்களுக்குப் பின் சில விமான சேவைகளை மீண்டும் இயக்குவதாக எமிரேட்ஸ் நிறுவனம் அறிவித்தது. இதனை பயன்படுத்தி, குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட 217 பேர் செவ்வாயன்று அதிகாலை 2.18 மணிக்கு சென்னை வந்தடைந்தனர்.