தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

2029 பொதுத் தேர்தலிலேயே மகளிர்க்கு 33% இடங்களை வழங்க முடியும் புதிய முன்மொழிவுகள் பெயரில் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா?

11 Apr 2026, 5:30 am
2029 பொதுத் தேர்தலிலேயே மகளிர்க்கு 33% இடங்களை வழங்க முடியும் புதிய முன்மொழிவுகள் பெயரில் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா?

2029 பொதுத் தேர்தலிலேயே மகளிர்க்கு 33% இடங்களை வழங்க முடியும் புதிய முன்மொழிவுகள் பெயரில் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா?

புதுதில்லி, ஏப். 10 - மகளிர்க்கான இட ஒதுக்கீடு சம்பந்தமாகவும், நாடாளுமன்றத் தொகுதி கள் மறுவரையறை தொடர்பாக வும் விரிவான அளவில் கலந்தா லோசனைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி கூறியுள்ளது. இதுதொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

108-ஆவது திருத்தத்தை சிபிஎம் ஆதரித்தது. நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்ட மன்றங்களில் மகளிர்க்கு மூன்றில் ஒரு பங்கு இடங்களைக் கட்டாயமாக்கு வதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுதியாக இருந்து வருகிறது. இத னால் தான், 2023-இல், மகளிர் இட ஒதுக்கீடு சட்டமுன்வடிவு முன்மொழி யப்பட்ட போது - பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறு வரையறையுடன் இணைப்பதை நாங்கள் எதிர்த்தபோதிலும் - பொது வாக சட்டமுன்வடிவையும், மகளிர்க்கு மூன்றில் ஒரு பங்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கான அரசியலமைப்புச் சட்டத்தின் 108-ஆவது திருத்தத்தையும் நாங்கள் ஆதரித்தோம்.

கணக்கெடுப்போடு இணைப்பது சரியானதல்ல! ஆனால், அந்தச் சமயத்திலேயே, பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை மக்கள் தொகைக் கணக்கெடுப்போடு இணைப்பது பெரும் தாமதத்தை ஏற்படுத்தும் என்றும், அதன் விளை வாக 2024 தேர்தல்களில் மட்டுமல்ல, 2029 தேர்தல்களிலும் கூட பெண் களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடங்களைக் கால உரிமை மறுக்கப்படும் என்றும் நாங்கள் கூறியிருந்தோம்.

ஒன்றிய பாஜக அரசுக்கு சிபிஎம் அரசியல் தலைமைக்குழு கண்டனம். மாநில சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறும் நேரத்தில், தேர்தல் ஆதாயம் என்ற குறுகிய அரசியல் நோக்கத்தை மையமாகக் கொண்டு, இத்தகைய ஒரு முன்மொழிவு முன் வைக்கப்படுவதை மக்கள் ஆட்சி மாண்புக்கு உரியதும் ஏற்றுக்கொள்ள முடியாததும் ஆகும்.

விரிவான ஆலோசனைகள் நடத்தப்பட வேண்டும். இது, வலுக்கட்டாயமாகச் செயல் படுத்த முடியாத பல சிக்கல்களை எழுப்புகிறது. மேலும் இதற்கு அனைத்து மாநிலங்களுடனும் கலந்தாலையாடலும் ஆலோசனையும் தேவைப்படுகிறது. மகளிர் இடஒதுக்கீடு வழங்க மோடி அரசின் உறுதி இல்லை. 2029 நாடாளுமன்ற பொதுத் தேர்தலிலிருந்தே பெண்களுக்கான இட ஒதுக்கீட்டைச் செயல்படுத்த முடியும் என்பதை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.