முந்தய பக்கம்

2026 வாக்குச்சாவடி

2 Apr 2026, 5:30 am
2026 வாக்குச்சாவடி

2026 வாக்குச்சாவடி

‘அட்ரஸ்’ தெரியாத அரசியல்! த.வெ.க-வின் கடிதப் படலமும்... சிரிப்பாய் சிரிக்கும் நிர்வாகமும்! சினிமாவில் ஒரு காட்சியை ரீ-டேக் வாங்கிச் சரிசெய்துவிடலாம். ஆனால் அரசியலில் ஒவ்வொரு அடியும் ‘லைவ் டெலிகாஸ்ட்’ என்பதை தமிழக வெற்றிக் கழகத்தினர் இன்னும் புரிந்துகொண்டதாகத் தெரியவில்லை.

முன்னாள் செயலாளருக்கு இன்னாள் கடிதம்! ஒன்றிய உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதுவதில் ஒரு அடிப்படை நாகரிகம் இருக்கிறது. தற்போது பதவியில் யார் இருக்கிறார் என்ற குறைந்தபட்ச தேடல் கூட இல்லாமல், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பதவியிழந்த ஆளுநரின் பெயரைக் குறிப்பிட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

பள்ளிக்கும் கல்லூரிக்கும் வித்தியாசம் தெரியாத ‘தளபதி’ படை! சட்டமன்றத் தேர்தலை நடத்துவது யார், உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது யார் என்ற அடிப்படைக் கல்வி கூட த.வெ.க-வுக்குப் பிடிபடவில்லை போலிருக்கிறது.

மாநிலத் தலைமை தேர்தல் அதிகாரிக்கு கடிதம் எழுதுவதற்குப் பதிலாக, உள்ளாட்சித் தேர்தலை நடத்தும் மாநில தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளனர். இது பத்தாம் வகுப்புத் தேர்வு எழுத அனுமதி கேட்டு, எல்.கே.ஜி வகுப்பு ஆசிரியரிடம் கொடுப்பதற்கு ஒப்பானது.

Share
FacebookXWhatsAppTelegram