தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

2026 நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் 101 உறுப்பினர்கள் மட்டுமே முழு பங்கேற்பு-ஆய்வில் தகவல்

18 Jul 2026, 8:49 pm
2026 நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் 101 உறுப்பினர்கள் மட்டுமே முழு பங்கேற்பு-ஆய்வில் தகவல்

2026 நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் 101 உறுப்பினர்கள் மட்டுமே முழு பங்கேற்பு-ஆய்வில் தகவல்

புதுதில்லி 2026ஆம் ஆண்டு துவக்கத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொட ருக்கு வருகை புரிந்த நாடாளுமன்ற உறுப்பி னர்களின் வருகைப் பதிவு குறித்த புதிய ஆய்வு ஒன்று வெளியாகியுள்ளது.

காமன்வெல்த் மனித உரிமைகள் முனைப்பு அமைப்பால் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் 45.76 சதவிகித உறுப்பினர்கள் மட்டுமே மக்கள வையில் 90 சதவிகிதம் முதல் 100 சதவிகிதம் வரையிலான வருகையைப் பதிவு செய்துள்ளார் கள் என தெரிய வந்துள்ளது. மொத்தமுள்ள 483 உறுப்பினர்களில் 309 பேர் (63.98%) 75 சதவிகித வருகையை பதிவு செய்துள்ளனர். முழுமையாக 31 நாட்களும் வருகை தந்தவர்கள் எண்ணிக்கை 101 (20%) ஆக மட்டுமே உள்ளது

. நாட்டின் பெரிய கட்சிகளான பா.ஜ.க எம்பிக்களின் சராசரி வருகைப்பதிவு 26.46 நாட்க ளாகவும், காங்கிரஸ் எம்பிக்கள் சராசரி வரு கைப்பதிவு 23.13 நாட்களாகவும் மட்டுமே உள்ளன. இது சிறிய கட்சிகளான ஜனதா தளம் (ஐக்கியம்) எம்பிக்கள் சராசரி வருகைப்பதி வான 27.91 நாட்கள் மற்றும் தெலுங்கு தேசம் கட்சி எம்.பி.க்களின் வருகைப்பதிவான 27.8 நாட்களை விட குறைவாகும்.

20-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட கட்சிகளில், திரிணாமுல் காங்கிரஸ் எம்பிக்கள் 15 நாட்கள் மற்றும் திமுக எம்பிக் கள் 14.64 நாட்கள் என மிகக்குறைந்த நாட்களே வருகை பதிவாக உள்ளது என தெரிவிக்கப் பட்டுள்ளது.

மாநிலங்களவையிலும் இதே போன்ற போக்கே காணப்படுவதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆய்வு செய்யப்பட்ட 255 உறுப்பினர்களில், 59 உறுப்பினர்கள் மட்டுமே அனைத்து நாட்களும் வருகை தந்துள்ளனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.